Tuesday, 5 January 2016

GINGER JUICE

இஞ்சி சுரசம் 

தேவையான பொருட்கள்

 இஞ்சி  1 இஞ்ச் அளவு 
எலுமிச்சை  1 சிறியது 
தேன் 1 மேஜைக்கரண்டி 




செய்முறை
இஞ்சியை சுத்தம் செய்து தோல் சீவிய  பின் பொடியாக நறுக்கி கொள்ளவும் . பிறகு மிக்சியில் அரைத்து சூடான நீரை உபயோகித்து சாறு  எடுக்க வேண்டும் . சுமாராக 100-150 மிலி சாறு கிடைக்கும் .
இஞ்சி சாற்றை ஒரு கிண்ணத்தில் 10 நிமிடங்கள் அசைக்காமல் வைக்கவும் 
கிண்ணத்தின் அடியில் வெள்ளையாக தங்கிய சுண்ணாம்பை நீக்க  தெளிவாக வேறு கிண்ணத்தில் எடுத்துக்கொள்ளவும் 
அத்துடன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து நன்றாக கலக்கவும் 
இஞ்சி சுரசம் தயார் .


பின் குறிப்பு
 நல்ல செரிமானம் மற்றும் பசி எடுக்க  சிறந்த மருந்து.
மேலே குறிப்பிட்ட அளவு இருவருக்கு போதுமானது 
காரமாக இருந்தால் தேன் வேண்டிய அளவு சேர்த்து கொள்ளலாம்.