Tuesday, 20 February 2018

உப்புமா கொழுக்கட்டை

தேவையான பொருட்கள் 

பச்சரிசி   200கிராம்
துவரம்பருப்பு  25 கிராம்                      
தேங்காய் அரை மூடி
மிளகு 1 தேக்கரண்டி
சீரகம் 1 தேக்கரண்டி
இஞ்சி சிறிதளவு
உப்பு தேவையான அளவு

தாளிக்க
நல்லெண்ணெய்  1 மேஜைக்கரண்டி
சிவப்பு மிளகாய் 1
பச்சை மிளகாய் 2
கடுகு 1/2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு 1/2 தேக்கரண்டி
கடலைப்பருப்பு 1/2 தேக்கரண்டி

பெருங்காயம் சிறிது
கறிவேப்பிலை

செய்முறை

 பச்சரிசி , துவரம் பருப்பு ,மிளகு மற்றும் சீரகம்   ஒன்றாக சேர்த்து ரவையாக உடைத் துகொள்ளவும்.
இஞ்சியை பொடியாக வெட்டிக்கொள்ளவும்.
வானலியில்  எண்ணெய் விட்டு  கடுகு மற்றும் கொடுத்துள்ளவற்றை தாளித்து 3 பங்கு தண்ணீர் ஊற்றவும் .தேவையான உப்பு சேர்க்கவும் .
தண்ணீர் கொதித்ததும் அரிசி +துவரம்பருப்பு ரவா , தேங்காய் பூவாக துருவியது  ,இஞ்சி 
சேர்த்து கிளறவும்.
சிறிது கெட்டியானதும் அடுப்பை அணைக்கவும் .

மாவை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து இட்லிப்பாத்திரத்தில்  வேகவைத்து எடுக்கவும் 

சுவையான உப்புமா கொழுக்கட்டை தயார்