Thursday, 19 September 2019

Coconut Rice

தேங்காய் சாதம் 

தேவையான பொருட்கள் 
 பச்சரிசி  200 கிராம் 
தேங்காய் 1 மூடி திருகியது 
உப்பு தேவையான அளவு 
பச்சை மிளகாய் 3
தாளிக்க - 
கடுகு ,உளுத்தம்பருப்பு ,பெருங்காயம் ,1 சிவப்பு மிளகாய்  மற்றும் கறிவேப்பிலை 

செய்முறை
பச்சரிசியை  2 1/2 பங்கு தண்ணீர் சேர்த்து குக்கரில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும் . சாதத்தை பெரிய பாத்திரத்தில் உதிர்த்து ஆற விடவும் 
 சிறிது  தேங்காய் எண்ணையில்  தாளிக்க கொடுத்துள்ளவற்றை தாளித்து அத்துடன் பொடியாக வெட்டிய பச்சை மிளகாய் ,தேங்காய் துருவல்   சேர்த்து வதக்கவும் .சாதத்தில் சேர்க்கவும் .உப்பு  சேர்த்து சிறிது நெய் சேர்த்து    கிளறவும்  . 

சுவையான தேங்காய்   சாதம் தயார் .
Optional:

கொத்தமல்லி இலை  பொடியாக நறுக்கி கடைசியில் மேலே தூவி விடலாம்  .
தளிக்கும் பொழுது முந்திரி,நிலக்கடலை ,பொட்டுகடலை   இவற்றை அவரவர் விருப்பப்படி சேர்த்துக் கொள்ளலாம் .