Saturday, 18 April 2020

KOTHAMALLI PULI

கொத்தமல்லி புளி
(ஊறுகாய்/தொகையல் வகை)

தேவையான பொருட்கள் 

கொத்தமல்லி  1 கட்டு
புளி சிறிதளவு
உளுத்தம் பருப்பு 4 மேஜைக்கரண்டி
வரமிளகாய்  4
பச்சை மிளகாய் 4
பெருங்காயம்   சிறிது 

உப்பு தேவைக்கேற்ப 
              

தாளிக்க
நல்லெண்ணெய்  1 மேஜைக்கரண்டி
கடுகு 1/2 தேக்கரண்டி
வரமிளகாய் 1



1) வெறும் வாணலியில் உளுத்தம்பருப்பை சிவக்கு வறுத்துக் கொள்ளவும்  . கடைசியில் வரமிளகாய் சேர்த்து சூடாக்கி கொள்ளவும் .

2) வாணலியில் நல்லெண்ணெய் விட்டு  பெருங்காயம் மற்றும் பச்சை மிளகாய் வதக்கி கடைசியில் கொத்தமல்லி சேர்த்து லேசாக வதக்கவும் .

மிக்ஸி ஜாரில் முதலில் 1 ,பிறகு 2 +புளி ,உப்பு சேர்த்து அரைக்கவும் .