Monday, 23 November 2015

PARUPPU RASAM

தேவையான பொருட்கள் 

துவரம்பருப்பு சிறிதளவு
உப்பு சிறிதளவு 
புளி சிறிதளவு 
அரைக்க - மிளகு,சீரகம் தலா 1 ஸ்பூன் ,பூண்டு 3 பல், 1 (அ )2 சிவப்பு மிளகாய் ,  தக்காளி ஒன்று .  
தாளிக்க - கடுகு ,1 சிவப்பு மிளகாய் ,பெருங்காயம் மற்றும் கறிவேப்பிலை 

செய்முறை

துவரம்பருப்பை வேகவைத்து எடுத்துக்கொள்ளவும் .

மிக்சியில் அரைக்க கொடுத்துள்ளவற்றுடன் பாதி தக்காளி சேர்த்து ஒன்றிரண்டாக (நைசாக அரைக்கத் தேவையில்லை ) அரைத்துக்கொள்ளவும் .

அத்துடன் உப்பு , புளி மற்றும்பாதி தக்காளியை சிறு துண்டகளாக்கி சேர்த்து தண்ணீரில்  கொதிக்க விடவும் .

நன்றாக கொதித்த பின் வேகவைத்த பருப்பை சேர்த்து ரசம் தேவையான அளவுக்கு தண்ணீர் சேர்த்து ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்து விடவும் .

சிறிது நெய் /நல்ல எண்ணையில் தாளிக்க கொடுத்துள்ளவற்றை தாளித்து போடவும்

பின்குறிப்பு

சாம்பாருக்காக பருப்பு வேகவைத்திருக்கும் சமயத்தில் பருப்பு தண்ணியை ரசத்திற்கு உபயோகித்துக் கொள்ளலாம் ..தனியாக பருப்பு வேகவைக்க தேவையில்லை 



Optional:

கொத்தமல்லி தலை பொடியாக நறுக்கி ரசத்தை அடுப்பிலிருந்து இறக்கியதும் சேர்த்தால்  ரசம் கூடுதல் மணத்துடன் கிடைக்கும் . .

No comments:

Post a Comment