Saturday, 21 November 2015

SIMPLE SAMBAR

அம்மாவின் கை பக்குவம் 

தேவையான பொருட்கள் 

துவரம்பருப்பு
காய்கறி - கத்தரிக் காய் ,பறங்கிக் காய்  ,அவரைக் காய்  ஏதாவது ஒன்று
உப்பு
புளி
சாம்பார்பொடி
தாளிக்க -கடுகு ,வெந்தயம்,மிளகாய் வத்தல் ,பெருங்காயம் , கறிவேப்பிலை
மற்றும் கொத்தமல்லி இலை

செய்முறை

துவரம்பருப்பை  குக்கரில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
அடி கனமான பா த்திரத்தில்  சிறிது தண்ணீரில் காயை வேகவிடவும்.
 சாம்பார்பொடி  மற்றும் உப்பு தேவையான அளவு சேர்க்கவும் 
காய் பாதி வெந்ததும்  புளி  தேவையான அளவு கரைத்து விடவும் 
நன்றாக காய்  வெந்த பிறகு வேகவைத்த பருப்பை சேர்க்கவும் .
ஒன்றாக சேர்ந்து கொதிக்க விடவும் 
கடா யில் நல்லெ ண்ணை  விட்டு கடுகு ,வெந்தயம்,மிளகாய் வத்தல் ,பெருங்காயம் , கறிவேப்பிலை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு தாளிக்கவும் .
கொத்தமல்லி இலையை பொடியாக வெட்டி மேலே தூவவும் .

சுவையான மணமணக்கும் சாம்பார் தயார் .

சாப்பிடலாம் வாங்க !!!  

பின்குறிப்பு 

பாகற்காய் ,வெண்டைக்காய் இவற்றை எண்ணெய் சிறிது விட்டு வதக்கி வேகவிடவும் 
கிழங்கு வகைகளை குக்கரில் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும் ..


No comments:

Post a Comment