Wednesday, 23 December 2015

அவியல்

தேவையான பொருட்கள் 
உருளைக் கிழங்கு
பீன்ஸ்
காரட்
கத்தரிக் காய்
முருங்கை காய்  தலா 100 கிராம்

அரைக்க
பச்சை மிளகாய்  3
தேங்காய் அரை மூடி துருவியது
சீரகம்  1 தேக்கரண்டி

தாளிக்க
தேங்காய் எண்ணெய்  1 மேசைக் கரண்டி
வெங்காயம் பொடியாக வெட்டியது
பச்சை மிளகாய் 2
கடுகு  1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு  1 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் 1
பெருங்காயம்
சீரகம்
கறிவேப்பிலை

மற்றும்
கெட்டித் தயிர்  200 கிராம்
உப்பு தேவையான அளவு


செய்முறை

காய்களை நீளவாக்கில் சிறு துண்டுகளாக வெட்டி எடுத்து தண்ணீரில் உப்பு போட்டு வேகவிடவும்.
தாளிக்க கொடுத்துள்ளவற்றை தேங்காய் எண்ணையில் தாளித்து சேர்க்கவும் .

அரைக்க கொடுத்துள்ளவற்றை சட்னி பதத்தில் அரைத்து அத்துடன் சேர்க்கவும்  

கெட்டித் தயிரை நன்றாக கடைந்து சேர்க்கவும்  

சுவையான அவியல்  தயார் . 

பின் குறிப்பு 
கொத்தமல்லி இலை பொடியாக வெட்டி கடைசியில் சேர்க்கலாம் .


No comments:

Post a Comment