Monday, 7 December 2015

வெங்காய பகோடா


வெங்காயம் 1
சோம்பு  1 தேக்கரண்டி
கறிவேப்பிலை
உ ப்பு சிறிதளவு 
வரமிளகாய் பொடி  தேவையான அளவு 
 கடலை மாவு 200 கிராம் 
அரிசி மாவு  50 கிராம் 
பொ ரித்தெடுக்க  தேவையான கடலை எண்ணெய் அல்லது சூரியகாந்தி எண்ணெய்(250 கிராம் )


செய்முறை

வெங்காயத்தை  பொடியாக வெட்டிக் கொள்ளவும் 

கடலை மாவு மற்றும் அரிசி மாவு 4:1 என்ற விகிதத்தில் எடுத்துக்கொண்டு தேவையான அளவு உப்பு , மிளகாய்ப்பொடி சோம்பு , பொடியாக வெட்டிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை   சேர்த்து சூடான எண்ணெய் 1 தேக்கரண்டி  சேர்த்து  லேசாக தண்ணீர் தெளித்து பிசறி வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் கடலை எண்ணெய் அல்லது சூரியகாந்தி எண்ணெயை சூடு பண்ணவும் .

தயாராக வைத்துள்ள மாவை எண்ணெயில் உதிராக உதிர்த்து விடவும்.
(சிறிது சிவக்க வேக வைத்து)   எண்ணெயில் பொறித்து எடுக்கவும் .

சூடான சுவையான வெங்காய பகோடா  தயார் . 


Optional:

தேவைப்பட்டால் சிறிது சோடா உப்பு மாவுடன்  சேர்த்துக் கொள்ளலாம்  

No comments:

Post a Comment