தைப்பொங்கல் குழம்பு
(ஸ்பெஷல் )
(4 நபர்களுக்கு )
தேவையான பொருட்கள்
(ஸ்பெஷல் )
(4 நபர்களுக்கு )
துவரம்பருப்பு 50 கிராம்
பச்சை மொச்சை 200 கிராம்
(உரித்து கொள்ளவும்)
காராமணி காய் 100 கிராம்
கொத்தவரங்காய் 100 கிராம்
அவரைக்காய் 100 கிராம்
முருங்கக்காய் 1
சர்க்கரைவள்ளி 100
பறங்கிக்காய் 100 கிராம்
வாழைக்காய் பாதி -1/2
கத்திரிக்காய் 200 கிராம்
சாம்பார் பொடி 2 தேக்கரண்டி
புளி பாதி சிறிய எலுமிச்சை அளவு
உப்பு தேவைக்கேற்ப
அரைக்க
தேங்காய் அரை மூடி
வர மிளகாய் 2
சீரகம் 1 தேக்கரண்டி
தாளிக்க
நல்லெண்ணெய் 1 மேஜைக்கரண்டி
கடுகு 1/2 தேக்கரண்டி
வெந்தயம் 1/4 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் 1
பச்சை மிளகாய் 1
சிறிய வெங்காயம் வெட்டியது -4
பெருங்காயம் சிறிது
கறிவேப்பிலை
கொத்தமல்லி இலை
செய்முறை
காய் கறிகளை சுத்தம் செய்து கொஞ்சம் பெரிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
அடி கனமான பாத்திரத்தில் இரண்டு டம்ளர் தண்ணீர் கொதிக்க விட்டு காய்கறிகளை மேலே கொடுத்துள்ள வரிசையில் ஒன்றன் மேல் ஒன்றாக சிறிது சிறிது இடைவெளி விட்டு போட்டு விடவும்.
இடையில் புளிக்கரைசல்,உப்பு மற்றும் சாம்பார் பொடி சேர்க்கவும்
காய்கள் நன்றாக வெந்தபின் அரைத்து வைத்துள்ளதை சேர்க்கவும்
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு மற்றும் கொடுத்துள்ளவற்றை தாளித்து சேர்க்கவும்
நன்றாக ஒன்று சேரும்படி கிளறவும். ஒன்று சேர்ந்து கொதிக்க விடவும்
இறக்கி வைத்து பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்க்கவும்

சுவையான பொங்கல் குழம்பு தயார்
No comments:
Post a Comment