Friday, 8 January 2021

KURUMA-POTATO&TOMATO

உருளை தக்காளி குருமா


தேவையான பொருட்கள்
 

உருளைக்கிழங்கு 1/4 கிலோ
தக்காளி 1/4 கிலோ
பெரிய வெங்காயம் 200 கிராம்
பச்சை மிளகாய் 2

உப்பு தேவைக்கேற்ப         


அரைக்க 
தேங்காய் அரை மூடி
வர மிளகாய் 2
சீரகம் 1 தேக்கரண்டி
தனியா  1 தேக்கரண்டி

தாளிக்க
நல்லெண்ணெய்  1 மேஜைக்கரண்டி
கடுகு 1/2 தேக்கரண்டி
கடலை பருப்பு 1 தேக்கரண்டி 
சிவப்பு மிளகாய் 1
பச்சை மிளகாய்  2
பெரிய  வெங்காயம்  வெட்டியது -4
தக்காளி வெட்டியது  1/4 கிலோ 
மசாலா பொருட்கள் :
 சோம்பு,பிரிஞ்சி இலை சிறிது ,பட்டை ,லவங்கம் ,ஏலம்
கறிவேப்பிலை

கொத்தமல்லி இலை 

செய்முறை


1.உருளைக்கிழங்கை குக்கரில் வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.

2.அரைக்க கொடுத்துள்ளவற்றை பச்சையாக அரைத்துக் கொள்ளவும் 

3.வாணலியில் என்னை விட்டு  கடுகு,வர மிளகாய்,கடலை பருப்பு,மசாலா சாமான் மற்றும் பச்சை மிளகாய்.வெங்காயம் ,தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும். பின் வவேகவைத்த உருளைக்கிழங்கை தோலுரித்து சிறுதுண்டுகளாக்கி சேர்த்து  தேவையான உப்பு போட்டு  நன்கு வதக்கவும்.பின் அரைத்து வைத்ததை சேர்த்துநன்றாக ஒன்று சேரும்படி கிளறவும். 
ஒன்று சேர்ந்து கொதிக்க விடவும் கொதிக்கவிட்டு இறக்கவும் .  



இறக்கி வைத்து பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்க்கவும் 


சுவையான வித்தியாசமான குருமா தயார். 

பி.கு :தேங்காய் சாதத்துடன் சேர்த்து சாப்பிட  பிரமாதமாக  பொருந்தும் 

Thursday, 7 January 2021

BISIBELABATH


                                                                பிஸிபேளாபாத் 



தேவையான பொருட்கள்

பச்சரிசி            200 கிராம் 
துவரம் பருப்பு 50 கிராம் 

கத்தரிக்காய்  100 கிராம் 
முருங்கைக்காய் 1
உருளைக்கிழங்கு 100 கிராம் 
காரட்  100 கிராம் 
பீன்ஸ் 50 கிராம் 
பட்டாணி 50 கிராம் 

புளி சிறிதளவு 
உப்பு தேவையான அளவு 
மஞ்சள் பொடி சிறிது 
நெய் 2 தேக்கரண்டி 

 
அரைக்க
கடலைப்பருப்பு 1 தேக்கரண்டி 
சிவப்பு மிளகாய் 5
தனியா 1 தேக்கரண்டி  
கொப்பரை/தேங்காய்  துருவியது  2 மேஜைக்கரண்டி  

தாளிக்க
நல்லெண்ணெய் 2 தேக்கரண்டி 
கடுகு  1 தேக்கரண்டி 
சிவப்பு மிளகாய் 1
மசாலா சாமான் : பிரிஞ்சி இலை ,பூ ,பட்டை ,லவங்கம் ,ஏலம் 
பச்சை மிளகாய்  1
சாம்பார்  வெங்காயம் 10
கறிவேப்பிலை 

கொத்தமல்லி இலை சிறிதளவு பொடியாக வெட்டியது 
 
செய்முறை

1.துவரம் பருப்பை குக்கரில் வேக வைத்து கொள்ளவும் 

2.அரைக்க கொடுத்துள்ளவற்றை வெறும் வாணலியில் சிவக்க வறுத்து அரைத்து எடுத்துக் கொள்ளவும் 

3.பச்சரிசியை  4 பங்கு தண்ணீர் சேர்த்து அடி கனமான பாத்திரத்தில் வேக விடவும்.  பாதி வெந்த பின் கொடுத்துள்ள காய்களை சிறிய துண்டுகளாக்கி ஒன்றன் மேல் ஒன்றாக சேர்க்கவும் .
3/4 பதத்தில் புளிக்கரைசல் மற்றும் உப்பு சேர்க்கவும் 

4.நன்றாக வெந்தபின், வேகவைத்த  துவரம் பருப்பு  மற்றும்  அரைத்தவற்றை சேர்க்கவும் 

5. சிறிது  நல்லெண்ணையில்  தாளிக்க கொடுத்துள்ளவற்றை தாளித்து 
சேர்க்கவும் 

6. இறக்கிய பின் சிறிதளவு நெய் மற்றும் கொத்தமல்லி சேர்க்கவும் 

சுவையான பிஸிபேளாபாத்  தயார் .