பட்டாணி மசாலா
தேவையான பொருட்கள்
பச்சைபட்டாணி 1/4 கிலோ
உருளைக்கிழங்கு 2
தக்காளி 1
மஞ்சள்பொடி சிறிது
உப்பு தேவைக்கேற்ப
கொத்தமல்லி இலை
அரைக்க
சிவப்பு மிளகாய் 5
சீரகம் 1 தேக்கரண்டி
தனியா 2 தேக்கரண்டி
ஏலம் 2
கிராம்பு 2
பெரிய வெங்காயம் 2
இஞ்சி சிறிது
பூண்டு 4 பல்
தாளிக்க
நல்லெண்ணெய் 2 மேஜைக்கரண்டி
மசாலா சாமான்
ஏலம் 1
கிராம்பு 1
அன்னாசி பூ 1
பட்டை சிறிது
கறிவேப்பிலை
செய்முறை
உருளைக்கிழங்கு மற்றும் பட்டாணியை குக்கரில் வேகவைத்துக் கொள்ளவும்.
உருளைக்கிழங்கு மற்றும் பட்டாணியை குக்கரில் வேகவைத்துக் கொள்ளவும்.
உருளைக்கிழங்கை தோல் நீக்கி துண்டுகளாக்கி கொள்ளவும் .
அரைக்க கொடுள்ளவற்றை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்
வாணலியில் எண்ணெய் விட்டு மசாலா சாமான் போட்டு பொரிந்ததும் கறிவேப்பிலை மற்றும் அரைத்த கலவையை போட்டு மஞ்சள் பொடி சேர்த்து கிளறவும் . நன்கு வதக்கியபின் வேகவைத்த பட்டாணி,உருளைக்கிழங்கு மற்றும் தக்காளி பொடியாக வெட்டியதை போட்டு உப்பு சேர்த்து 10 நிமிடம் வேக விட்டு இறக்கி விடவும்.
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்க்கவும்
சுவையான பட்டாணி மசாலா தயார்
பி.கு :
பூரி /சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ளலாம்
உருளை கிழங்கு சேர்க்காமலும் செய்யலாம்


No comments:
Post a Comment