Wednesday, 17 March 2021

LEMON SEMIYA

எலுமிச்சை சேமியா  


தேவையான பொருட்கள் 

சேமியா 200 கிராம் 
பச்சை மிளகாய் 2 
உப்பு தேவைக்கேற்ப 
எலுமிச்சை ஜூஸ் 1/2 தேக்கரண்டி 
           
தாளிக்க

நல்லெண்ணெய்  2 மேஜைக்கரண்டி
கடுகு 1 தேக்கரண்டி

சிவப்பு மிளகாய் 2
உளுத்தம்பருப்பு 2 தேக்கரண்டி 
பொட்டுக்கடலை 2 தேக்கரண்டி 
நிலக்கடலை வறுத்தது 2 தேக்கரண்டி 
கறிவேப்பிலை

கொத்தமல்லி இலை 

செய்முறை

சேமியாவை வேகவைத்து( 3/4 பதத்தில் ) வடித்துக் கொள்ளவும் 

வாணலியில்  எண்ணெய் விட்டு  கடுகு மற்றும் கொடுத்துள்ளவற்றை தாளித்து
சேமியா + தேவையான உப்பு போட்டு கிளறவும் .பின் இறக்கி விடவும். பின் எலுமிச்சை ஜூஸ் சேர்த்து கிளறவும்.


பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்க்கவும் 

சுவையான எலுமிச்சை சேமியா   தயார் 


பி.கு : 

எலுமிச்சை சேமியா காலை உணவாக மற்றும் மாலை சிற்றுண்டியாக சாப்பிடலாம் 
தேவைப்பட்டால் தேங்காய் சட்னி தொட்டுக்கொள்ளலாம் .

No comments:

Post a Comment