தேவையான பொருட்கள்
சிறிய வெங்காயம் 10-15
புளி நெல்லிக்காய் அளவு
உப்பு தேவைகேற்ப
அரைக்க
துவரம் பருப்பு 2 மேஜைகரண்டி
மிளகு 1மேஜைகரண்டி
சிவப்பு மிளகாய் தேவைக்கேற்ப
தாளிக்க - கடுகு ,வெந்தயம்,பெருங்காயம் ,துவரம்பருப்பு 1 தேக்கரண்டி ,1 சிவப்பு மிளகாய் மற்றும் கறிவேப்பிலை
செய்முறை
வெறும் வாணலியில் அரைக்க கொடுத்துள்ளவற்றை நன்றாக சிவக்க வறுத்து எடுத்து ஆறியபின் மிக்ஸியில் நைசாக பொடி செய்து வைத்துக்கொள்ளவும் .
வாணலியில் 1 மேஜைகரண்டி நல்லெண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவற்றை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு தாளித்து பின் பூண்டு மற்றும் சிறிய வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும் . பிறகு உப்பு மற்றும் புளி கரைசலை விடவும் . புளி வாசனை போகும் வரை /பூண்டு வெங்காயம் வேகும்வரை கொதிக்க விடவும்.பின் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து கொதிக்க விட்டு இறக்கி வைக்கவும் .

Optional:
சிறிது சுண்ட வத்தல் /மணத்தக்காளி வத்தல் வறுத்து இறுதியில் சேர்க்கலாம் .
தேவைப்பட்டால் சம்பார்பொடி சிறிது சேர்க்கலாம் .
பின் குறிப்பு
சளி பிடித்திருந்தாலோ வயிறு பிரச்சனை இருந்தாலோ இந்த மிளகு குழம்பு செய்து சாப்பிட உடனடி நிவாரணம் கிடைக்கும் .
No comments:
Post a Comment