Tuesday, 1 December 2015

நீர் உருண்டை


தேவையான பொருட்கள் 

புழுங்கல் அரிசி  200கிராம்                              
தேங்காய் அரை மூடி
உப்பு தேவையான அளவு
நல்லெண்ணெய் 1  மேஜைக்கரண்டி
தாளிக்க
நெய்   1  மேஜைக்கரண்டி
சீரகம் 1 மேஜைக்கரண்டி
சிவப்பு மிளகாய்
கறிவேப்பிலை


செய்முறை

புழுங்கல்  அரிசியை 4 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும் .
அரிசியுடன் தேங்காய் பூவாக துருவியது மற்றும் உப்பு சேர்த்து அரைத்து  எடுத்துக்கொள்ளவும்.
வாணலியில்  நல்லெண்ணெய் விட்டு அரைத்த மாவை கொஞ்சம் கெட்டியாகும் வரை கிளறவும். பின்  சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும் 
உருண்டைகளை இட்லி பாத்திரத்தில் இட்லி வேக வைப்பது போல வேகவைத்து எடுத்துக்கொள்ளவும் .
வாணலியில் நெய்யை விட்டு சீரகம்,சிவப்பு மிளகாய் மற்றும் கறிவேப்பிலை போட்டு வேகவைத்து எடுத்த உருண்டைகளை போட்டு கிளறி எடுக்கவும் .

சுவையான மணக்கும் நீர் உருண்டை தயார் .

 Optional:

மாவை கிளறும்  பொழுது  பொடியாக நறுக்கிய வெங்காயம் சிறிதளவு,சேர்க்கலாம் .

பின் குறிப்பு 

எண்ணெய்  இல்லாத இந்த அருமையான நீர் உருண்டை மாலை நேர சிற்றுண்டியாக உண்ணலாம் .

சளி பிடித்திருக்கும் சமயம் இந்த நீர் உருண்டையை செய்து உண்டால் சளியிலிருந்து  நிவாரணம் கிடைக்கும் .



. .

No comments:

Post a Comment