Saturday, 20 February 2021

PALAKKAI PORIYAL

 பலாப்பிஞ்சு/பலாமூசு  பொரியல்                  

தேவையான பொருட்கள் 

சிறிய பலாப்பிஞ்சு 1
சாம்பார் பொடி/மிளகாய் பொடி  
1/ 2 தேக்கரண்டி
உப்பு தேவைக்கேற்ப 
 எலுமிச்சை ஜூஸ் 1/2 தேக்கரண்டி 
           
தாளிக்க

நல்லெண்ணெய்  1 மேஜைக்கரண்டி
கடுகு 1 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் 2
உளுத்தம்பருப்பு 2 தேக்கரண்டி 
கறிவேப்பிலை
தேங்காய் அரை மூடி (பூவாக  திருகியது )

கொத்தமல்லி இலை 

செய்முறை

பலாப்பிஞ்சு தோல் நீக்கி பெரிய  வில்லைகளாக  வெட்டிக்கொள்ளவும்.

அடி  கனமான பாத்திரத்தில் இரண்டு டம்ளர் தண்ணீர் கொதிக்க விட்டு  வெட்டிய பலாக்காய்  +மிளகாய் பொடி +உப்பு வேக விடவும்..

அரை வேக்காடு வெந்தபின்  நீரை வடித்து விடவும் . காய் ஆற விட்டு உதிரியாக்கிக்கொள்ளவும். மிக்ஸியில் வைப்பர் /நம்பர் 1 உபயோகித்து உதிரியாக்கலாம் .


வாணலியில்  எண்ணெய் விட்டு  கடுகு மற்றும் கொடுத்துள்ளவற்றை தாளித்து
 தேங்காயை சேர்த்து கிளறி இறக்கி விடவும். பின் எலுமிச்சை ஜூஸ் சேர்த்து கிளறவும்.


பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்க்கவும் 

சுவையான பலாக்காய் பொரியல்  தயார் 

No comments:

Post a Comment