Monday, 22 February 2021

RIBBON BAKODA

 

ரிப்பன்  பகோடா                                                

புழுங்கல் அரிசி 1/2 கிலோ (2  1/2 டம்ளர் )
சிவப்பு மிளகாய் 15 
கடலை பருப்பு மாவு  1 டம்ளர் 
பொட்டுக்கடலை மாவு 1/2 டம்ளர் 
பூண்டு 10
பெருங்காயம் சிறிதளவு 
வெண்ணெய் 1 மேஜைக்கரண்டி 
உ ப்பு தேவையான அளவு  
பொரித்தெடுக்க  தேவையான கடலை எண்ணெய் 500 கிராம் 


செய்முறை

அரிசி +மிளகாய்+பூண்டு  கிரைண்டரில் நைசாக அரைத்துக் கொள்ளவும்  

கடலை மாவு, பொட்டுக்கடலை மாவு ,பெருங்காயம் ,வெண்ணெய்  மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து பிசைந்து  வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் கடலை  எண்ணெயை சூடு பண்ணவும் .


தயாராக வைத்துள்ள மாவை எண்ணெயில் ரிப்பன் பகோடா அச்சில் பிழிந்து    பொறித்து எடுக்கவும் .

 சுவையான ரிப்பன் பகோடா  தயார் . 


 

No comments:

Post a Comment