Friday, 12 February 2021

RAW MANGO SWEET PACHADI

மாங்காய் இனிப்பு பச்சடி 

தேவையான பொருட்கள் 

மாங்காய் 200 கிராம் 

வெல்லம்  100 கிராம் 

சாம்பார் பொடி  1 தேக்கரண்டி 

மஞ்சள் பொடி  சிறிது 

பச்சரிசி மாவு 1 தேக்கரண்டி 


தாளிக்க - 

நல்லெண்ணெய் 1 மேஜைக்கரண்டி
கடுகு 1 தேக்கரண்டி 
சிவப்பு மிளகாய் 1
உளுந்தம்பருப்பு 1 மேஜைக்கரண்டி
பச்சை மிளகாய் 2 
கறிவேப்பிலை 
உப்பு  சிறிது  

 
செய்முறை
  • வாணலியில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவற்றை போட்டு தாளித்து வெட்டிய பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து பின் 300 மிலி தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
  • மாங்காய் தோல் சீவி ஸ்லைஸ் களாக வெட்டி கொதிக்கும் நீரில் போட்டு வேகவிடவும் .சாம்பார் பொடி  மற்றும் மஞ்சள் பொடி  சேர்க்கவும்.
  • பதமாக வெந்ததும் (கரைந்து விட கூடாது) வெல்லம் பொடித்து சேர்க்கவும்.
  • வெல்லம் நன்றாக கரைந்து கொதித்தபின் அரிசி மாவு சிறிது நீரில் கரைத்து சேர்க்கவும்
  • கொதித்தபின் இறக்கி விடவும் 

      சுவையான மாங்காய்    இனிப்பு பச்சடி   தயார் .

Optional:
☺கொத்தமல்லி இலை  பொடியாக நறுக்கி கடைசியில் மேலே தூவி விடலாம்  .

No comments:

Post a Comment