![]() |
கேழ்வரகு வடை (இனிப்பு&காரம்)
அ ) கேழ்வரகு வடை - இனிப்பு
கேழ்வரகு மாவு 1 டம்ளர் (200 கிராம்)
ஈர உளுந்து மாவு 2 மேஜைக்கரண்டி
வெல்லம் 100 கிராம்
பொரித்தெடுக்க தேவையான கடலை எண்ணெய் 250 கிராம்
செய்முறை
இட்லிக்கு அரைக்கும் உளுந்து மாவு போல உளுந்தை அரைத்துக் கொள்ளவும் .
வெல்லத்தை சிறிது நீரில் கொதிக்க விட்டு வடிகட்டிக்கொள்ளவும்.
பின் கேழ்வரகு மாவு +உளுந்து மாவு+வெல்லம் பாகு சேர்த்து பிசையவும் .
வடையாக தட்டும் பதத்திற்கு இருக்கவேண்டும்.
தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளித்து பிசைந்து கொள்ளவும் .
வாணலியில் கடலை எண்ணெயை சூடு பண்ணவும் .
வடை போல தட்டி நடுவில் ஓட்டை போட்டு எண்ணையில் பொரித்தெடுக்கவும் .
சுவையான கேழ்வரகு இனிப்பு வடை தயார் .
கேழ்வரகு மாவு 1 டம்ளர் (200 கிராம்)
ஈர உளுந்து மாவு 1/4 டம்ளர்
பெரிய வெங்காயம் 1
பச்சை மிளகாய் 2
கறிவேப்பிலை
சீரகம் 1 தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு
பொரித்தெடுக்க தேவையான கடலை எண்ணெய் 250 கிராம்
செய்முறை
இட்லிக்கு அரைக்கும் உளுந்து மாவு போல உளுந்தை அரைத்துக் கொள்ளவும் .
பெரிய வெங்காயம் ,பச்சை மிளகாய் ,கறிவேப்பிலை இவற்றை பொடியாக வெட்டிக்கொள்ளவும் .
பின் கேழ்வரகு மாவு +உளுந்து மாவு+பொடியாக வெட்டிய பெரிய வெங்காயம் ,பச்சை மிளகாய் ,கறிவேப்பிலை + உப்பு சேர்த்து பிசையவும் .
வடையாக தட்டும் பதத்திற்கு இருக்கவேண்டும்.
தேவைப்பட்டால் சிறி து தண்ணீர் தெளித்து பிசைந்து கொள்ளவும் .
வாணலியில் கடலை எண்ணெயை சூடு பண்ணவும் .
வடை போல தட்டி நடுவில் ஓட்டை போட்டு எண்ணையில் பொரித்தெடுக்கவும் .
சுவையான கேழ்வரகு கார வடை தயார் .
பி.கு :
1. இனிப்பு மற்றும் கார வடை மாவு தயார் செய்து கொண்டு பின் எண்ணையில் பொரித்து எடுக்க வேண்டும் .
2.வடை தட்ட பால் கவர் உபகோயாகித்தால் சுலபமாக தட்டலாம்.
3.உளுந்து மாவு , இனிப்பு மற்றும் கார வடைக்கு சேர்த்து அரைத்து கொள்ளலாம் .
4.தோசைக்கல்லில் அடை போல தட்டி எண்ணெய் விட்டு வேகவைத்தும் செய்யலாம்


No comments:
Post a Comment