காரட் ஜூஸ்
(2 டம்ளர் ஜூஸ் )
காரட் 3
இஞ்சி துண்டு சிறியது 1
கொத்தமல்லி சிறிது
தேன் 1/2 தேக்கரண்டி
எலுமிச்சை ஜூஸ் 1/4 தேக்கரண்டி
செய்முறை
1.காரட் ,இஞ்சி மற்றும் கொத்தமல்லி இலை சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக்கி கொள்ளவும்.
2.மிக்ஸியில் இவற்றை போட்டு 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டி கொள்ளவும்
3.அதன்பின் தேன் ,எலுமிச்சை சாறு கலந்து கொள்ளவும்.
சுவையான காரட் ஜூஸ் தயார் .
பி .கு
1.காரட்டை அரைக்கும் பொழுது எலுமிச்சை சாறு ,தேன் சேர்க்கவே கூடாது
2.வடிகட்டிய பின் உள்ள விழுதை வீட்டில் வளர்க்கும் செடிகளுக்கு உரமாக போடலாம்

Looks yummy madam
ReplyDeleteVery yummy
ReplyDeleteColourful.. healthy.. juice.👍👍
ReplyDelete