மசால் வடை (20-22 எண்ணிக்கை )
தேவையான பொருட்கள்
கடலை பருப்பு 200 கிராம்
பெரிய வெங்காயம் 2
வாழைப்பூ 1 கப்
சோம்பு 1 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய் 4
பெருங்காயம் சிறிது
கறிவேப்பிலை சிறிது
கொத்தமல்லி சிறிது
உப்பு சிறிதளவு
அரிசி மாவு 1 மேஜைக்கரண்டி
பொ ரித்தெடுக்க தேவையான கடலை எண்ணெய்
செய்முறை
2.வாழைப்பூவை சுத்தம் செய்து பொடியாக வெட்டிக்கொள்ளவும்
3.வெங்காயம் பொடியாக வெட்டிக்கொள்ளவும்
4.கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லியை பொடியாக வெட்டிக்கொள்ளவும்
5.ஊறிய கடலை பருப்பை மிக்ஸியில் நீர் அதிகம் சேர்க்காமல் கொர கொரப்பாக அரைத்துக்கொள்ளவும்
6.அத்துடன் பொடியாக்கிய வாழைப்பூ ,வெங்காயம் ,கறிவேப்பிலை ,கொத்தமல்லி மற்றும் சோம்பு ,பெருங்காயம், அரிசி மாவு ,உப்பு தேவையான அளவு சேர்த்து பிசைந்து கொள்ளவும் .
7. வாணலியில் கடலை எண்ணெயை சூடு பண்ணவும் .
8.மாவை சிறு உருண்டைகளாக்கி பின் இரு புறமும் அழுத்தி
எண்ணெயில் பொறித்து எடுக்கவும் .
சூடான சுவையான வாழைப்பூ மசால் வடை தயார்
பி.கு
1.வாழைப்பூ சேர்க்காமலும் மசால் வடை செய்யலாம்
2.காரம் தேவைப்பட்டால் வரமிளகாய் பொடி சேர்க்கலாம் .
3. அரைக்கும்பொழுது ஒன்று இரண்டு முழு பருப்பு இருக்கட்டும் .அரைப்பட தேவையான தண்ணீர் மட்டுமே சேர்க்க வேண்டும்.அப்பொழுதுதான் கரகரப்பாக இருக்கும்


No comments:
Post a Comment