தேவையான பொருட்கள்
கோதுமை மாவு 2 கப்
சர்க்கரை 1 கப்
ஏலக்காய் 2
நெய் 2 டீஸ்பூன்
பொரித்தெடுக்க தேவையான கடலை எண்ணெய்
செய்முறை
அரைத்துக் கொள்ளவும்.
2. ஏலக்காயை பொடித்துக் கொள்ளவும்.
3. கோதுமை மாவு +சர்க்கரை +ஏலம் + நெய் சேர்த்து நன்றாக
கலந்து கொள்ளவும்.
4.பின் சிறிது தண்ணீர் சேர்த்து சப்பாத்தி பதத்தில்
பிசைந்து கொள்ளவும்.
5.சிறு உருண்டையாக எடுத்து சப்பாத்தி கட்டையில் சப்பாத்தி
போல சிறிது கனமாக தேய்த்து கொள்ளவும்
6.ஓரங்களை வெட்டி எடுத்தபின் தேவையானபடி சதுரமாகவோ/டயமண்டு ஆகவோ வெட்டிக்கொள்ளவும்
7.பின் வாணலியில் எண்ணெய் வைத்து
நன்றாக சூடேறியதும்
வெட்டிய துண்டுகளை
போட்டு வேகவைத்து எடுக்கவும்.
சுவையான கலகலா தயார்
பி.கு
1.தண்ணீர் சேர்த்து பிசையும் பொழுது சிறிது சிறிதாக கவனமாக சேர்க்க வேண்டும்.
சர்க்கரை சேர்த்து இருப்பதால் அதிகம் தேவைப்படாது
2.சப்பாத்தி சிறிது கனமாக இருக்க வேண்டியது அவசியம்.
3.எண்ணைக்குள் போட்டு சிறிது நேரம் வெந்த பிறகுதான் கிளறி விட வேண்டும்.
4. எண்ணையில் நன்றாக வெந்து எடுக்க வேண்டும்.
5. எடுத்து சிறிது ஆறியபின் மொற மொறப்பாகி(crispy) விடும் .
5. தேவைக்கேற்ப இனிப்பு சேர்த்துக்கொள்ளலாம்




No comments:
Post a Comment