Thursday, 25 March 2021

Sweetpotato podimas

சர்க்கரைவள்ளி பொடிமாஸ்                                             

தேவையான பொருட்கள் 

சர்க்கரைவள்ளி 1/4 கிலோ 
உப்பு தேவைக்கேற்ப 
 
           
தாளிக்க

நல்லெண்ணெய்  1 மேஜைக்கரண்டி
கடுகு 1 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் 2
உளுத்தம்பருப்பு 2 தேக்கரண்டி 
பச்சைமிளகாய் 1
சிறிய வெங்காயம் 5(பொடியாக வெட்டியது)


கறிவேப்பிலை
தேங்காய் அரை மூடி (பூவாக  திருகியது )

கொத்தமல்லி இலை 

செய்முறை

சர்க்கரைவள்ளிக்கிழங்கை  தோலுடன் அரை வேக்காடு வேகவைத்து எடுத்துக்கொள்ளவும் 

சிறிது ஆறவிட்டு தோல் நீக்கி காரட் துருவியில் துருவிக்கொள்ளவும் 



வாணலியில்  எண்ணெய் விட்டு  கடுகு மற்றும் கொடுத்துள்ளவற்றை தாளித்து துருவிய சர்க்கரைவள்ளி +தேவையான உப்பு +தேங்காய் 
 சேர்த்து கிளறி இறக்கி விடவும்.


பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்க்கவும் 

சுவையான சர்க்கரைவள்ளி பொடிமாஸ்       தயார் 

Wednesday, 24 March 2021

Greengram Sundal


 பச்சைப்பயறு சுண்டல் 

தேவையான பொருட்கள்

பச்சைப்பயறு  1/4 கிலோ 

உப்பு தேவைக்கேற்ப

           
தாளிக்க

நல்லெண்ணெய்  2 தேக்கரண்டி 
கடுகு 1 தேக்கரண்டி 
சிவப்பு மிளகாய் 3
பெருங்காயம் சிறிது 
கறிவேப்பிலை


செய்முறை

பச்சைப்பயறு  குக்கரில் 1 1/2 பங்கு தண்ணீர் சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும்.
 
வாணலியில்  எண்ணெய் விட்டு   கடுகு+மிளகாய் +பெருங்காயம் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு பொரிந்ததும் கறிவேப்பிலை சேர்த்து பின் வேகவைத்த பச்சைப்பயறு +தேவையான உப்பு  உப்பு சேர்த்து கிளறி  இறக்கி விடவும். 


சுவையான பச்சைப்பயறு சுண்டல்   தயார் 


பி.கு : 

பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்க்கலாம் .
நேரம் இருந்தால் பச்சைப்பயறு 2-3 மணி நேரம் ஊற வைத்து பின் வேக வைக்கலாம் 


Sunday, 21 March 2021

PEAS MASALA



பட்டாணி மசாலா 

தேவையான பொருட்கள் 

பச்சைபட்டாணி 1/4 கிலோ 
உருளைக்கிழங்கு 2 
தக்காளி 1
மஞ்சள்பொடி சிறிது 
உப்பு தேவைக்கேற்ப
கொத்தமல்லி இலை

அரைக்க 

சிவப்பு மிளகாய் 5
மிளகு 1 தேக்கரண்டி                                     
சீரகம்  1 தேக்கரண்டி 
தனியா 2 தேக்கரண்டி 
ஏலம் 2
கிராம்பு 2
பெரிய வெங்காயம் 2
இஞ்சி சிறிது 
பூண்டு 4 பல் 

           
தாளிக்க

நல்லெண்ணெய்  2 மேஜைக்கரண்டி
மசாலா சாமான் 
ஏலம் 1
கிராம்பு 1
அன்னாசி பூ 1
பட்டை சிறிது 
கறிவேப்பிலை


செய்முறை

உருளைக்கிழங்கு மற்றும் பட்டாணியை குக்கரில் வேகவைத்துக் கொள்ளவும்.
உருளைக்கிழங்கை தோல் நீக்கி துண்டுகளாக்கி கொள்ளவும் .

அரைக்க கொடுள்ளவற்றை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும் 


வாணலியில்  எண்ணெய் விட்டு   மசாலா சாமான் போட்டு பொரிந்ததும் கறிவேப்பிலை மற்றும் அரைத்த கலவையை போட்டு மஞ்சள் பொடி சேர்த்து  கிளறவும் . நன்கு வதக்கியபின் வேகவைத்த பட்டாணி,உருளைக்கிழங்கு மற்றும் தக்காளி பொடியாக வெட்டியதை போட்டு உப்பு சேர்த்து 10 நிமிடம் வேக விட்டு  இறக்கி விடவும். 

பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்க்கவும் 

சுவையான பட்டாணி மசாலா  தயார் 


பி.கு : 

பூரி /சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ளலாம் 

உருளை கிழங்கு சேர்க்காமலும் செய்யலாம் 


Wednesday, 17 March 2021

LEMON SEMIYA

எலுமிச்சை சேமியா  


தேவையான பொருட்கள் 

சேமியா 200 கிராம் 
பச்சை மிளகாய் 2 
உப்பு தேவைக்கேற்ப 
எலுமிச்சை ஜூஸ் 1/2 தேக்கரண்டி 
           
தாளிக்க

நல்லெண்ணெய்  2 மேஜைக்கரண்டி
கடுகு 1 தேக்கரண்டி

சிவப்பு மிளகாய் 2
உளுத்தம்பருப்பு 2 தேக்கரண்டி 
பொட்டுக்கடலை 2 தேக்கரண்டி 
நிலக்கடலை வறுத்தது 2 தேக்கரண்டி 
கறிவேப்பிலை

கொத்தமல்லி இலை 

செய்முறை

சேமியாவை வேகவைத்து( 3/4 பதத்தில் ) வடித்துக் கொள்ளவும் 

வாணலியில்  எண்ணெய் விட்டு  கடுகு மற்றும் கொடுத்துள்ளவற்றை தாளித்து
சேமியா + தேவையான உப்பு போட்டு கிளறவும் .பின் இறக்கி விடவும். பின் எலுமிச்சை ஜூஸ் சேர்த்து கிளறவும்.


பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்க்கவும் 

சுவையான எலுமிச்சை சேமியா   தயார் 


பி.கு : 

எலுமிச்சை சேமியா காலை உணவாக மற்றும் மாலை சிற்றுண்டியாக சாப்பிடலாம் 
தேவைப்பட்டால் தேங்காய் சட்னி தொட்டுக்கொள்ளலாம் .

Tuesday, 2 March 2021

BEETROOT KARAPORIYAL


 பீட்ரூட்  காரபொரியல்                  

தேவையான பொருட்கள் 

பீட்ரூட்  2
பச்சை மிளகாய் 2 
உப்பு தேவைக்கேற்ப 
எலுமிச்சை ஜூஸ் 1/2 தேக்கரண்டி 
           
தாளிக்க

நல்லெண்ணெய்  1 மேஜைக்கரண்டி
கடுகு 1 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் 2
உளுத்தம்பருப்பு 2 தேக்கரண்டி 
கறிவேப்பிலை

கொத்தமல்லி இலை 

செய்முறை

பீட்ரூட்  தோல் நீக்கி காரட் துருவியில் துருவிக்கொள்ளவும் 


வாணலியில்  எண்ணெய் விட்டு  கடுகு மற்றும் கொடுத்துள்ளவற்றை தாளித்து
பீட்ரூட் துருவல் +வெட்டிய பச்சை மிளகாய்  சேர்த்து தேவையான உப்பு போட்டு வதக்கவும். சிறிது வதங்கிய பின் இறக்கி விடவும். பின் எலுமிச்சை ஜூஸ் சேர்த்து கிளறவும்.


பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்க்கவும் 

சுவையான காரா பீட்ரூட்  பொரியல்  தயார் 


பி.கு : 

எலுமிச்சை ஜூஸ் இல்லாமல் தேங்காய் அரை மூடி (பூவாக  திருகியது ) சேர்த்து சாதாரண பொரியல் ஆக செய்யலாம்