Monday, 14 June 2021

WheatFlour Puttu/கோதுமைமாவு புட்டு

 இனிப்பு & காரம் 

தேவையான பொருட்கள் 

இனிப்பு புட்டு 

வறுத்த கோதுமை மாவு 200 கிராம்

நாட்டு சர்க்கரை  6 டீஸ்பூன் 

தேங்காய்  துருவியது   4 டீஸ்பூன் 

ஏலக்காய் 2 பொடித்தது 

நெய் 2 டீஸ்பூன் 

கார புட்டு 

வறுத்த கோதுமை மாவு 200 கிராம் 

பெரிய  வெங்காயம் 1

பச்சை மிளகாய் 2

கறிவேப்பிலை 

எண்ணெய் 2 டீஸ்பூன் 

கடுகு 1 டீஸ்பூன் 

சிவப்பு மிளகாய் 1

உளுந்தம்பருப்பு 2 டீஸ்பூன் 

உப்பு தேவையான அளவு 


செய்முறை

1. வறுத்த கோதுமை மாவு எல்லாவற்றையும் (200+200= 400 கிராம் ) துளியளவு உப்பு சேர்த்து ,
சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து புட்டு மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும் .
2. பின் இட்லி பாத்திரத்தில் 5 நிமிடங்கள் வேக வைத்து எடுத்துக்கொள்ளவும் 

இனிப்பு புட்டு 


 பாதி அளவு மாவில் (200 கிராம்) தேங்காய் ,
 நாட்டு சர்க்கரை,நெய் மற்றும்  ஏலக்காய் 
பொடி  சேர்த்து நன்றாக கிளறி மூடி வைக்கவும் .   
சுவையான இனிப்பு புட்டு தயார் 






கார புட்டு 

வாணலியில் எண்ணெய் விட்டு  கடுகு ,உளுத்தம்பருப்பு ,கறிவேப்பிலை ,சிவப்பு மிளகாய் போட்டு தாளித்து அத்துடன் பொடியாக வெட்டிய பெரிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து கிளறவும். நன்கு வெங்காயம் வதங்கியதும் சிறிது உப்பு சேர்த்து கிளறி பின் வெந்த கோதுமை மாவையும் சேர்த்து கிளறி இறக்கி  மூடி வைக்கவும் .

சுவையான கார புட்டு தயார் 





பி.கு 

1. கோதுமையை வறுத்து மாவு தயாரித்தால் மிக சுவையாக இருக்கும்.
கோதுமை மாவு கைவசம் இருந்தால் அதை வறுத்தும்  செய்யலாம் 
2.எண்ணெய் இல்லாத சத்து  மிக்க ஒரு உணவு .
3.உடனடியாக செய்யக்கூடியது 
4.அனைவருக்கும் ஏற்ற காலை உணவு 
5. மாலை சிற்றுண்டி மற்றும் இரவு உணவுக்கும் ஏற்றது  



No comments:

Post a Comment