Saturday, 24 July 2021

COLOCASIA FRY/சேப்பங்கிழங்கு வறுவல் கறி



 தேவையான பொருட்கள்
(2 நபர்களுக்கு)

சேப்பங்கிழங்கு  1/4 கிலோ  

வரமிளகாய் பொடி (அ ) கரி மசாலா பொடி தேவையான அளவு 
மஞ்சள் பொடி சிறிது 
கடலை மாவு 2 டீஸ்பூன் 
அரிசி மாவு 1 டீஸ்பூன் 
சோளமாவு 1 டீஸ்பூன் 
உப்பு சிறிதளவு
தாளிக்க - நல்ல எண்ணெய் /கடலை எண்ணெய் 1 தேக்கரண்டி 
கடுகு ,உளுத்தம்பருப்பு ,1 சிவப்பு மிளகாய்  ,பெருங்காயம் மற்றும் கறிவேப்பிலை 

செய்முறை

 1.சேப்பங்கிழங்கை  குக்கரில்  வேகவைத்து எடுத்துக்கொள்ளவும் 
2. வேகவைத்து எடுத்து  தோல் உரித்து சிறிய துண்டகளாக்கி கொள்ளவும் 
3. வாணலியை சூடாக்கி   எண்ணையில் தாளிக்க கொடுத்துள்ளவற்றை தாளித்து . 
அத்துடன் உப்பு வரமிளகாய் பொடி(அ )மசாலா பொடி ,மஞ்சள் பொடி மற்றும் மாவு எல்லாவற்றையும் சேர்த்து  நன்றாக பொடி வாசனை போகும் வரை  கிளறவும் . 
பின் அடுப்பை அணைத்து விடவும்  

சுவையான மொறு மொறுப்பான சேப்பங்கிழங்கு வறுவல் கறி தயார் 


பி.கு 

1.வேக வைத்து எடுத்து நன்றாக ஆறியபின் தோல் உரித்தால் சுலபமாகவும் ஒட்டாமலும் வரும்.
2.கடலை மாவு ,அரிசி மாவு,சோள  மாவு இவற்றில் ஏதேனும் 2 மாவு இருந்தாலும் செய்யலாம்  

Tuesday, 20 July 2021

URAD DAL VADA/உளுத்தம்பருப்பு வடை



தேவையான பொருட்கள்
 (15-20 எண்ணிக்கை )

உளுத்தம்பருப்பு  150 கிராம்
பச்சை மிளகாய் 3 
மிளகு 1 டீஸ்பூன் 
சீரகம் 1 டீஸ்பூன் 
பெரிய வெங்காயம் 2
கறிவேப்பிலை சிறிது 
கொத்தமல்லி சிறிது 
உப்பு சிறிதளவு 
அரிசி மாவு 1 மேஜைக்கரண்டி 
பொ ரித்தெடுக்க  தேவையான கடலை எண்ணெய் 

செய்முறை

1.உளுத்தம் பருப்பை 1 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும் .
2.ஊறிய உளுத்தம் பருப்பு +பச்சை மிளகாய் மிக்ஸியில்/கிரைண்டரில்  தண்ணீர் சிறிது சிறிதாக     சேர்த்து நைசாக அரைத்துக்கொள்ளவும் .
3. அரைத்து முடிக்கும் முன் மிளகு சீரகம் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவும் 
4.வெங்காயம் பொடியாக வெட்டிக்கொள்ளவும் 
5.கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லியை பொடியாக வெட்டிக்கொள்ளவும் 
6..அரைத்து  மாவுடன் வெங்காயம் ,கறிவேப்பிலை ,கொத்தமல்லி மற்றும்  அரிசி மாவு ,உப்பு தேவையான அளவு சேர்த்து பிசைந்து கொள்ளவும் .
7. வாணலியில் கடலை  எண்ணெயை சூடு பண்ணவும் .
8.மாவை சிறு உருண்டைகளாக்கி தட்டி  பின் நடுவில் ஓட்டை போட்டு  
  எண்ணெயில் பொறித்து எடுக்கவும் .

சூடான சுவையான உளுத்தம்பருப்பு  வடை தயார் 

பி.கு 
1.வெங்காயம்   சேர்க்காமலும்  வடை செய்யலாம் 
2.சாம்பார் வடைக்கு வெங்காயம் சேர்க்காத வடையை சாம்பாரில் ஊற  வைத்து சாப்பிடலாம் 
3. மிக்ஸியில் அரைப்பதற்கு குளிர்ந்த நீரை பயன் படுத்திக்கொள்ளலாம் .மாவு சூடு ஏறி வடை சிவந்து போவதை தவிர்க்கலாம் 

Wednesday, 7 July 2021

Aval Upma/அவல் உப்புமா



தேவையான பொருட்கள்

சிவப்பு அவல்/வெள்ளை அவல்  (கெட்டி)200 கிராம் 
பெரிய வெங்காயம் 1
பச்சை மிளகாய் 2
தக்காளி 1
கேரட் 1
இஞ்சி சிறிது 
மஞ்சள் பொடி  சிறிது 
தாளிக்க 
நல்லெண்ணெய் /கடலெண்ணெய் 2 டீஸ்பூன் 
கடுகு 1 டீஸ்பூன் 
உளுந்தம்பருப்பு 2 டீஸ்பூன் 
சீரகம் 1 டீஸ்பூன் 
சிவப்பு மிளகாய் 1
நிலக்கடலை வறுத்தது 2 டீஸ்பூன் 
கறிவேப்பிலை
கொத்தமல்லி  இலை       

செய்முறை

1.அவல் -ஐ சுத்தம் செய்து ,தண்ணீரில் களைந்து எடுத்து சிறிது நீரில் 15 நிமிடம்  நேரம் ஊற விடவும்.
2.பெரிய வெங்காயம் ,பச்சைமிளகாய் ,தக்காளி, இஞ்சியை பொடியாக வெட்டிக்கொள்ளவும் 
3.வாணலியில் எண்ணெய் விட்டு மேலே கொடுத்துள்ளவற்றை போட்டு தாளித்து பின் பொடியாக வெட்டிய பெரிய வெங்காயம் ,பச்சைமிளகாய் ,தக்காளி இஞ்சியை சேர்த்து நன்றாக வதக்கவும்.
4.சிறிது உப்பு  துருவிய காரட் சேர்த்து வதக்கிய பின் ஊறிய அவல்  சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும் .
5.கொத்தமல்லி இலையை பொடியாக வெட்டி மேலே தூவி விடவும்.

சுவையான சத்தான   அவல்   உப்புமா  தயார் .

பி.கு 

1.சிவப்பு அவல் அல்லது  வெள்ளை அவல் -இல் செய்யலாம் .
2.தேவைப்பட்டால் தேங்காய் சட்டினி சேர்த்து சாப்பிடலாம் 
3.காலை/இரவு  உணவாகவோ மாலை சிற்றுண்டியாகவோ செய்யலாம் 

Saturday, 3 July 2021

Sesame Thogaiyal/எள்ளு தொகையல்


எள்ளு தொகையல்  

தேவையான பொருட்கள் 

கருப்பு எள்ளு 50  கிராம் 
சிவப்பு மிளகாய் 3
புளி சிறிது 
உப்பு தேவைக்கேற்ப 
           
செய்முறை
  • வெறும் வாணலியில் எள்ளு  மற்றும் மிளகாய் வறுத்து  எடுத்துக் கொள்ளவும் .
  • எள்ளு சிறிது பொரிய விடவும் .
  • இவை எல்லாவற்றையும் புளி மற்றும்  உப்பு சேர்த்து மிக்ஸியில் சிறிது தண்ணீர் விட்டு அரைத்து எடுக்கவும்.
  • சுவையான சத்தான எள்ளு  தொகையல் தயார்.

பி.கு 
  1. சாதத்துடன் சேர்த்து சாப்பிட அருமையான பொருத்தம்.
  2. எண்ணெய்  இல்லாத மற்றும் சத்தான தொகையல்.
  3. மிளகாய் தேவையான அளவு சேர்த்து கொள்ளலாம் .
  4. இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது .

Ingrdients

Black Sesame 50 gms
3 Red dried chili
Pinch of Tamarind
Salt

Instructions
  • In a dry pan, fry the sesame seeds  and chilies.
  • Let sesame seeds splits a little.
  • In a mixer. add the sesame seeds , chilies, tamarind with salt and grid them. Add water to get a paste consistency.
  • Yummy Sesame thogaiyal is ready to be served.
Notes
  1. Add them to your white rice with a little ghee/gingely oil and enjoy instant lunch.
  2. Red chillies can be added as per requirement.
  3. Its oil-free, healthy.
  4. Good for reducing sugar problem.