Monday, 22 February 2021

RIBBON BAKODA

 

ரிப்பன்  பகோடா                                                

புழுங்கல் அரிசி 1/2 கிலோ (2  1/2 டம்ளர் )
சிவப்பு மிளகாய் 15 
கடலை பருப்பு மாவு  1 டம்ளர் 
பொட்டுக்கடலை மாவு 1/2 டம்ளர் 
பூண்டு 10
பெருங்காயம் சிறிதளவு 
வெண்ணெய் 1 மேஜைக்கரண்டி 
உ ப்பு தேவையான அளவு  
பொரித்தெடுக்க  தேவையான கடலை எண்ணெய் 500 கிராம் 


செய்முறை

அரிசி +மிளகாய்+பூண்டு  கிரைண்டரில் நைசாக அரைத்துக் கொள்ளவும்  

கடலை மாவு, பொட்டுக்கடலை மாவு ,பெருங்காயம் ,வெண்ணெய்  மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து பிசைந்து  வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் கடலை  எண்ணெயை சூடு பண்ணவும் .


தயாராக வைத்துள்ள மாவை எண்ணெயில் ரிப்பன் பகோடா அச்சில் பிழிந்து    பொறித்து எடுக்கவும் .

 சுவையான ரிப்பன் பகோடா  தயார் . 


 

Saturday, 20 February 2021

PALAKKAI PORIYAL

 பலாப்பிஞ்சு/பலாமூசு  பொரியல்                  

தேவையான பொருட்கள் 

சிறிய பலாப்பிஞ்சு 1
சாம்பார் பொடி/மிளகாய் பொடி  
1/ 2 தேக்கரண்டி
உப்பு தேவைக்கேற்ப 
 எலுமிச்சை ஜூஸ் 1/2 தேக்கரண்டி 
           
தாளிக்க

நல்லெண்ணெய்  1 மேஜைக்கரண்டி
கடுகு 1 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் 2
உளுத்தம்பருப்பு 2 தேக்கரண்டி 
கறிவேப்பிலை
தேங்காய் அரை மூடி (பூவாக  திருகியது )

கொத்தமல்லி இலை 

செய்முறை

பலாப்பிஞ்சு தோல் நீக்கி பெரிய  வில்லைகளாக  வெட்டிக்கொள்ளவும்.

அடி  கனமான பாத்திரத்தில் இரண்டு டம்ளர் தண்ணீர் கொதிக்க விட்டு  வெட்டிய பலாக்காய்  +மிளகாய் பொடி +உப்பு வேக விடவும்..

அரை வேக்காடு வெந்தபின்  நீரை வடித்து விடவும் . காய் ஆற விட்டு உதிரியாக்கிக்கொள்ளவும். மிக்ஸியில் வைப்பர் /நம்பர் 1 உபயோகித்து உதிரியாக்கலாம் .


வாணலியில்  எண்ணெய் விட்டு  கடுகு மற்றும் கொடுத்துள்ளவற்றை தாளித்து
 தேங்காயை சேர்த்து கிளறி இறக்கி விடவும். பின் எலுமிச்சை ஜூஸ் சேர்த்து கிளறவும்.


பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்க்கவும் 

சுவையான பலாக்காய் பொரியல்  தயார் 

Friday, 12 February 2021

RAW MANGO SWEET PACHADI

மாங்காய் இனிப்பு பச்சடி 

தேவையான பொருட்கள் 

மாங்காய் 200 கிராம் 

வெல்லம்  100 கிராம் 

சாம்பார் பொடி  1 தேக்கரண்டி 

மஞ்சள் பொடி  சிறிது 

பச்சரிசி மாவு 1 தேக்கரண்டி 


தாளிக்க - 

நல்லெண்ணெய் 1 மேஜைக்கரண்டி
கடுகு 1 தேக்கரண்டி 
சிவப்பு மிளகாய் 1
உளுந்தம்பருப்பு 1 மேஜைக்கரண்டி
பச்சை மிளகாய் 2 
கறிவேப்பிலை 
உப்பு  சிறிது  

 
செய்முறை
  • வாணலியில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவற்றை போட்டு தாளித்து வெட்டிய பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து பின் 300 மிலி தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
  • மாங்காய் தோல் சீவி ஸ்லைஸ் களாக வெட்டி கொதிக்கும் நீரில் போட்டு வேகவிடவும் .சாம்பார் பொடி  மற்றும் மஞ்சள் பொடி  சேர்க்கவும்.
  • பதமாக வெந்ததும் (கரைந்து விட கூடாது) வெல்லம் பொடித்து சேர்க்கவும்.
  • வெல்லம் நன்றாக கரைந்து கொதித்தபின் அரிசி மாவு சிறிது நீரில் கரைத்து சேர்க்கவும்
  • கொதித்தபின் இறக்கி விடவும் 

      சுவையான மாங்காய்    இனிப்பு பச்சடி   தயார் .

Optional:
☺கொத்தமல்லி இலை  பொடியாக நறுக்கி கடைசியில் மேலே தூவி விடலாம்  .

Wednesday, 10 February 2021

PONGAL

 பொங்கல் 

தேவையான பொருட்கள் 

 பச்சரிசி  200 கிராம்

பயத்தம் பருப்பு 50 கிராம்  

தாளிக்க - 
நெய் 2 மேஜைக்கரண்டி
முந்திரி 10 ,
இஞ்சி சிறிது 
மிளகு 1 தேக்கரண்டி 
சீரகம் 1 தேக்கரண்டி 
பச்சை மிளகாய் 3
தேங்காய் 1 மூடி திருகியது (OPTIONAL  )
உப்பு தேவையான அளவு 

 கறிவேப்பிலை 

செய்முறை
பச்சரிசி+ மிதமாக வறுத்த பயத்தம் பருப்பு +இஞ்சி பொடியாக வெட்டியது +உப்பு  3 1/2 பங்கு தண்ணீர் சேர்த்து குக்கரில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும் . 
வாணலியில் நெய் விட்டு முந்திரி துண்டுகள்,ஒன்றிரண்டாக உடைத்த மிளகு+சீரகம்,வெட்டியா பச்சைமிளகாய்,கறிவேப்பிலை ,தேங்காய் (பூவாக)  ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கி  சேர்க்கவும்.

சுவையான பொங்கல்  தயார் .
Optional:
☺கொத்தமல்லி இலை  பொடியாக நறுக்கி கடைசியில் மேலே தூவி விடலாம்  .
☺தாளிக்கும் பொழுது சிறிது கடலை எண்ணெய்  சேர்த்துக் கொள்ளலாம் .


Tuesday, 9 February 2021

BEETROOT HALWA

 பீட்ரூட் அல்வா                                           

தேவையான பொருட்கள

பீட்ரூட்  250  கிராம்

சர்க்கரை (சுகர்) 250 கிராம்  

நெய் 50 கிராம் 
முந்திரி 10 ,
ஏலக்காய் 5 
 

செய்முறை

பீட்ரூட் பெரிய துண்டுகளாக வெட்டி வேகவைக்கவும்.
ஆறவைத்து மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும் .
வாணலியில் அரைத்த பீட்ரூட் மற்றும் சர்க்கரை சேர்த்து கிளறவும்.
ஒன்று சேர்ந்து வரும்படி சிறுது சிறிதாக நெய் சேர்த்து கிளறவும் .
வாணலியில் ஒட்டாத பதம்  வரும்போது இறக்கிவிடவும் 
ஏலக்காய் பொடி சேர்த்து முந்திரியை துண்டுகளாக்கி நெய்யில் வருத்து சேர்க்கவும் 

சுவையான பீட்ரூட் ஹல்வா தயார் 

பி .கு 

விருந்து சாப்பாட்டில் 'சைடு டிஷ் ' ஆக வைக்கலாம்