Sunday, 25 April 2021

Tomato Thokku

 தக்காளி தொக்கு 


தேவையான பொருட்கள் 

தக்காளி 1 கிலோ 
பூண்டு 10 பல் 
புளி   நெல்லிக்காய் அளவு 
வரமிளகாய் பொடி 4 தேக்கரண்டி 
வெந்தயம் 1 தேக்கரண்டி  
உப்பு தேவையான அளவு
நல்லெண்ணெய்  200 கிராம் 


தாளிக்க 

கடுகு 2 தேக்கரண்டி
வரமிளகாய் 2 
பெருங்காயம்  சிறிது 


செய்முறை

தக்காளியை காம்பு நீக்கி சிறு சிறு  துண்டுகளாக்கி கொள்ளவும் .
பூண்டு உரித்து சிறு சிறு  துண்டுகளாக்கி கொள்ளவும் .

வாணலியில்  50 கிராம்   நல்லெண்ணெய் விட்டு தக்காளி மற்றும் பூண்டு போட்டு 
வதக்கவும் . நன்றாக வதங்குவதற்கு 20-30 நிமிடங்கள் ஆகும்.
சிறிது இடைவெளி இருக்குமாறு மூடி வைத்து கொண்டு இடையிடையே கிளறி விடவும் .
சிறிது சிறிதாக 100 கிராம் நல்லெண்ணெயை சேர்க்கவும் .
புளியை ஊறவைத்து கெட்டியாக கரைத்து விடவும்.
உப்பு சேர்த்து கொள்ளவும் .
எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கி இறக்கவும் 
வெறும் வாணலியில் வெந்தயத்தை வறுத்து பொடி செய்து சேர்க்கவும்  
மீதம் உள்ள 50 கிராம் எண்ணையில் கடுகு மற்றும் பெருங்காயம் தாளித்து சேர்க்கவும் 

அருமையான தக்காளி தொக்கு  தயார் 

Optional:

தக்காளி புளி மற்றும் பூண்டை மிக்ஸியில் அரைத்தும் வதக்கலாம் .

பின் குறிப்பு 

இட்லி ,தோசை,சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள பொருத்தமான தொக்கு 
சாதத்திற்கும் பொருத்தமாக இருக்கும் .
இந்த தொக்கு ஊறுகாய் போல மாதக்கணக்கில் வைத்து சாப்பிடலாம் .

 


Saturday, 24 April 2021

BRINJAL KOTHSU

 கத்தரிக்காய்  கொத்சு 

(4 நபர்களுக்கு )


தேவையான பொருட்கள் 
 
கத்திரிக்காய் 200  கிராம்
பச்சை மிளகாய்  2 (வெட்டியது)
பெரிய  வெங்காயம்2 - பொடியாக  வெட்டியது 
தக்காளி 2-பொடியாக  வெட்டியது 
சாம்பார் பொடி 1 தேக்கரண்டி 
மஞ்சள் பொடி சிறிது 
புளி சிறிது  அளவு 
உப்பு தேவைக்கேற்ப 
              

தாளிக்க
நல்லெண்ணெய்  2தேக்கரண்டி 
கடுகு 1/2 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி 
சிவப்பு மிளகாய் 1
பெருங்காயம் சிறிது
கறிவேப்பிலை
கொத்தமல்லி இலை 

செய்முறை

கத்திரிக்காயை பொடியாக வெட்டிக்கொள்ளவும்.

வாணலியில்  எண்ணெய் விட்டு  கடுகு மறறும் கொடுத்துள்ளவற்றை தாளித்து அத்துடன் பச்சை மிளகாய் ,வெங்காயம்,தக்காளி  மற்றும் கத்தரிக்காயை சேர்த்து வதக்கி பின் புளி  கரைத்து சேர்த்து ,மிளகாய் பொடி ,மஞ்சள் பொடி  மற்றும் உப்பு சேர்த்து குக்கரில் வேகவிடவும் .(2-3 விசில் )


பின் நன்றாக கடைந்து விடவும் 

இறக்கி வைத்து பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்க்கவும் 


சுவையான கத்திரிக்காய் கொத்சு  தயார் 

பி.கு : பொங்கல் ,இட்லி மற்றும் சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள  பொருத்தமானது . 

பெரிய கத்தரிக்காய் சுட்டு செய்வதற்கு பதில் சாதாரண கத்திரிக்காயில் இப்படிசெய்து   விடலாம் 

Friday, 23 April 2021

Sweet wheat flour

 இனிப்பு கோதுமை மாவு  


தேவையான பொருட்கள்

கோதுமை மாவு 200 கிராம் 

சீனி  100 கிராம் 

முந்திரி 6 

ஏலக்காய் 3

நெய் 4  தேக்கரண்டி 

செய்முறை

வாணலியில் நெய்  சூடு பண்ணவும் .


முந்திரியை சிறிய வில்லைகளாக்கி பொன் நிறமாக வறுத்து  எடுத்துக்கொள்ளவும் 

பின் அதே வாணலியில் நெய்யில் கோதுமை  மாவு போட்டு வாசனை  வரும் வரை வறுக்கவும் .

அத்துடன் சீனி சேர்த்து நன்றாக கிளறவும் .

அடுப்பிலிருந்து இறக்கி பின் வறுத்து  வைத்துள்ள முந்திரி  மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து கிளறவும்.

சுவையான கோதுமை இனிப்பு மாவு    தயார் . 


பி.கு 

இந்த மாவு பௌர்ணமி தினத்தில் ஸ்வாமிக்கு நெய்வேத்தியம் செய்வது சிறப்பு .

குழந்தைகளுக்கு மாலை சிற்றுண்டியாக கொடுத்தால் விரும்பி  சாப்பிடுவர் .

உடனடியாக 10 நிமிடத்தில் தயார் செய்து விடலாம் 
 

Sunday, 18 April 2021

BABYCORN FRY


சோளம் பிஞ்சு வறுவல் 


தேவையான பொருட்கள்

சோளம் பிஞ்சு 200 கிராம் 

உ ப்பு சிறிதளவு

மஞ்சள் பொடி சிறிது அளவு  

வரமிளகாய் பொடி  தேவையான அளவு 
கடலை மாவு 25 கிராம் 
அரிசி மாவு  25 கிராம் 
சோளமாவு  25 கிராம் 
பொரித்தெடுக்க  தேவையான கடலை எண்ணெய் 250 கிராம்


செய்முறை

சோளம் பிஞ்சு+உ ப்பு  +மஞ்சள் பொடி + வரமிளகாய் பொடி  +கடலை மாவு  +அரிசி மாவு  +சோளமாவு   மற்றும்  சூடான எண்ணெய் 1 தேக்கரண்டி  சேர்த்து  லேசாக தண்ணீர் தெளித்து பிசறி வைத்துக் கொள்ளவும்.


வாணலியில் கடலை எண்ணெயை சூடு பண்ணவும் .

தயாராக வைத்துள்ளதை எண்ணெயில் உதிராக உதிர்த்து விடவும்.
(சிறிது சிவக்க வேக வைத்து)   எண்ணெயில் பொறித்து எடுக்கவும் .

சூடான சுவையான சோளப்பிஞ்சு வறுவல்   தயார் . 


Optional:

கரம் மசாலா தூள் விருப்பப்பட்டால்   சேர்த்துக் கொள்ளலாம்  

Thursday, 15 April 2021

RAGI VADAI(Sweet&Karam)

 

RAGI SWEET VADAI

கேழ்வரகு வடை (இனிப்பு&காரம்)


 அ ) கேழ்வரகு வடை - இனிப்பு 

                                      

கேழ்வரகு மாவு 1 டம்ளர் (200 கிராம்)
ஈர உளுந்து மாவு 2 மேஜைக்கரண்டி 
வெல்லம்  100 கிராம் 
பொரித்தெடுக்க  தேவையான கடலை எண்ணெய் 250  கிராம் 


செய்முறை


இட்லிக்கு அரைக்கும் உளுந்து மாவு போல உளுந்தை  அரைத்துக் கொள்ளவும் .
வெல்லத்தை சிறிது நீரில் கொதிக்க விட்டு வடிகட்டிக்கொள்ளவும்.
பின் கேழ்வரகு மாவு +உளுந்து மாவு+வெல்லம் பாகு  சேர்த்து பிசையவும் .
வடையாக தட்டும் பதத்திற்கு இருக்கவேண்டும்.
தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளித்து பிசைந்து கொள்ளவும் .
வாணலியில் கடலை  எண்ணெயை சூடு பண்ணவும் .

வடை போல தட்டி நடுவில் ஓட்டை  போட்டு எண்ணையில் பொரித்தெடுக்கவும் .

சுவையான கேழ்வரகு இனிப்பு வடை  தயார் .

ஆ ). கேழ்வரகு வடை (காரம்)


கேழ்வரகு மாவு 1 டம்ளர் (200 கிராம்)
ஈர உளுந்து மாவு 1/4 டம்ளர் 
பெரிய வெங்காயம் 1
பச்சை மிளகாய் 2
கறிவேப்பிலை 
சீரகம் 1 தேக்கரண்டி 
உப்பு தேவையான அளவு 
 
பொரித்தெடுக்க  தேவையான கடலை எண்ணெய் 250  கிராம் 


செய்முறை


இட்லிக்கு அரைக்கும் உளுந்து மாவு போல உளுந்தை  அரைத்துக் கொள்ளவும் .
பெரிய வெங்காயம் ,பச்சை மிளகாய் ,கறிவேப்பிலை இவற்றை பொடியாக வெட்டிக்கொள்ளவும் .

பின் கேழ்வரகு மாவு +உளுந்து மாவு+பொடியாக வெட்டிய பெரிய வெங்காயம் ,பச்சை மிளகாய் ,கறிவேப்பிலை  + உப்பு   சேர்த்து பிசையவும் .
வடையாக தட்டும் பதத்திற்கு இருக்கவேண்டும்.
தேவைப்பட்டால் சிறி து தண்ணீர் தெளித்து பிசைந்து கொள்ளவும் .


வாணலியில் கடலை  எண்ணெயை சூடு பண்ணவும் .
வடை போல தட்டி நடுவில் ஓட்டை  போட்டு எண்ணையில் பொரித்தெடுக்கவும் .

சுவையான கேழ்வரகு கார வடை  தயார் .

பி.கு :

1. இனிப்பு மற்றும்  கார வடை மாவு தயார் செய்து கொண்டு பின் எண்ணையில் பொரித்து எடுக்க வேண்டும் .
2.வடை தட்ட பால் கவர் உபகோயாகித்தால் சுலபமாக தட்டலாம்.
3.உளுந்து மாவு , இனிப்பு மற்றும் கார வடைக்கு சேர்த்து அரைத்து கொள்ளலாம் .
4.தோசைக்கல்லில் அடை போல தட்டி எண்ணெய்  விட்டு வேகவைத்தும் செய்யலாம் 














Monday, 12 April 2021

BRINJAL + DAL KOTHSU

 கத்தரிக்காய்+பருப்பு  கொத்சு 

(4 நபர்களுக்கு )


தேவையான பொருட்கள் 
பயத்தம் பருப்பு  50 கிராம் 
கத்திரிக்காய் 200  கிராம்
பெரிய வெங்காயம் 2
பச்சை மிளகாய் 2
சாம்பார் பொடி 1 தேக்கரண்டி 
புளி சிறிது  அளவு 
உப்பு தேவைக்கேற்ப 
              

தாளிக்க
நல்லெண்ணெய்  2தேக்கரண்டி 
கடுகு 1/2 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் 1
பச்சை மிளகாய்  2 (வெட்டியது)
பெரிய  வெங்காயம் பொடியாக  வெட்டியது -2
பெருங்காயம் சிறிது
கறிவேப்பிலை
கொத்தமல்லி இலை 

செய்முறை

பயத்தம் பருப்பை சிறிது வறுத்து எடுத்து வேக விட்டு எடுத்துக்கொள்ளவும்.

கத்திரிக்காயை பொடியாக வெட்டிக்கொள்ளவும்.

வாணலியில்  எண்ணெய் விட்டு  கடுகு மறறும் கொடுத்துள்ளவற்றை தாளித்து அத்துடன் வெங்காயம் மற்றும் கத்தரிக்காயை சேர்த்து வதக்கி பின் புளி  கரைத்து சேர்த்து ,மிளகாய் பொடி ,உப்பு சேர்த்து வேகவிடவும் .

நன்றாக வெந்தபின் பரு ப்பையும் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும் .
பின் கடைந்து விடவும் 

இறக்கி வைத்து பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்க்கவும் 


சுவையான கத்திரிக்காய் கொத்சு  தயார் 

பி.கு : பொங்கல் /இட்லி க்கு தொட்டுக்கொள்ள  பொருத்தமானது . 

Sunday, 11 April 2021

Sweet Aval/இனிப்பு அவல்

தேவையான பொருட்கள் 

சிவப்பு அவல் (கெட்டி)200 கிராம் 
நாட்டு சர்க்கரை/வெல்லம் 150 கிராம்
ஏலம் 2
தேங்காய் துருவல் 2 மேஜைக்கரண்டி 
 
           

செய்முறை
அவல் -ஐ சுத்தம் செய்து ,தண்ணீரில் களைந்து எடுத்து சிறிது நீரில் 15 நிமிடம்  நேரம் ஊற விடவும்.
ஏலம்  தூள் ,தேங்காய் மற்றும் வெல்லம்   சேர்த்து கிளறி விட்டு ,15 நிமிடம் நேரத்திற்கு பின் எடுக்கவும் .


சுவையான சத்தான  இனிப்பு அவல்    தயார் .

பி.கு 

சிவப்பு அவல் கிடைக்காவிடில் வெள்ளை அவல் -இல் செய்யலாம்