தேவையான பொருட்கள்
Wednesday, 23 June 2021
Kalakala - கலகலா
கோதுமை மாவு 2 கப்
சர்க்கரை 1 கப்
ஏலக்காய் 2
நெய் 2 டீஸ்பூன்
பொரித்தெடுக்க தேவையான கடலை எண்ணெய்
செய்முறை
அரைத்துக் கொள்ளவும்.
2. ஏலக்காயை பொடித்துக் கொள்ளவும்.
3. கோதுமை மாவு +சர்க்கரை +ஏலம் + நெய் சேர்த்து நன்றாக
கலந்து கொள்ளவும்.
4.பின் சிறிது தண்ணீர் சேர்த்து சப்பாத்தி பதத்தில்
பிசைந்து கொள்ளவும்.
5.சிறு உருண்டையாக எடுத்து சப்பாத்தி கட்டையில் சப்பாத்தி
போல சிறிது கனமாக தேய்த்து கொள்ளவும்
6.ஓரங்களை வெட்டி எடுத்தபின் தேவையானபடி சதுரமாகவோ/டயமண்டு ஆகவோ வெட்டிக்கொள்ளவும்
7.பின் வாணலியில் எண்ணெய் வைத்து
நன்றாக சூடேறியதும்
வெட்டிய துண்டுகளை
போட்டு வேகவைத்து எடுக்கவும்.
சுவையான கலகலா தயார்
பி.கு
1.தண்ணீர் சேர்த்து பிசையும் பொழுது சிறிது சிறிதாக கவனமாக சேர்க்க வேண்டும்.
சர்க்கரை சேர்த்து இருப்பதால் அதிகம் தேவைப்படாது
2.சப்பாத்தி சிறிது கனமாக இருக்க வேண்டியது அவசியம்.
3.எண்ணைக்குள் போட்டு சிறிது நேரம் வெந்த பிறகுதான் கிளறி விட வேண்டும்.
4. எண்ணையில் நன்றாக வெந்து எடுக்க வேண்டும்.
5. எடுத்து சிறிது ஆறியபின் மொற மொறப்பாகி(crispy) விடும் .
5. தேவைக்கேற்ப இனிப்பு சேர்த்துக்கொள்ளலாம்
Thursday, 17 June 2021
Ragi Semiya(Sweet&Karam) - கேழ்வரகு சேமியா(இனிப்பு &காரம்)
தேவையான பொருட்கள்
இனிப்பு
அணில் கேழ்வரகு சேமியா 100 கிராம்
நாட்டு சர்க்கரை 4 டீஸ்பூன்
தேங்காய் துருவியது 2 டீஸ்பூன்
ஏலக்காய் 2 பொடித்தது
நெய் 2 டீஸ்பூன்
காரம்
அணில் கேழ்வரகு சேமியா 100 கிராம்
பெரிய வெங்காயம் 1
பச்சை மிளகாய் 2
காரட் 1 (துருவியது )
கறிவேப்பிலை
எண்ணெய் 2 டீஸ்பூன்
கடுகு 1 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய் 1
உளுந்தம்பருப்பு 2 டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு
செய்முறை
1. அணில் சேமியா எல்லாவற்றையும் (100+100= 200 கிராம் ) துளியளவு உப்பு சேர்த்து ,
2 லிட்டர் தண்ணீரில் 5 நிமிடங்கள் ஊற விடவும் .
பாதி அளவு மாவில் (100 கிராம்) தேங்காய் ,
நாட்டு சர்க்கரை,நெய் மற்றும் ஏலக்காய்
பொடி சேர்த்து நன்றாக கிளறி மூடி வைக்கவும் .
சுவையான இனிப்பு சேமியா தயார்
கார சேமியா
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு ,உளுத்தம்பருப்பு ,கறிவேப்பிலை ,சிவப்பு மிளகாய் போட்டு தாளித்து அத்துடன் பொடியாக வெட்டிய பெரிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து கிளறவும். நன்கு வெங்காயம் வதங்கியதும் சிறிது உப்பு மற்றும் காரட் சேர்த்து கிளறி பின் வெந்த கேழ்வரகு சேமியாவை சேர்த்து கிளறி இறக்கி மூடி வைக்கவும் .
சுவையான கார சேமியா தயார்
பி.கு
1. சேமியாவை 5 நிமிடத்திற்கு மேல் தண்ணீரில் ஊற விட கூடாது.
அதிகம் ஊறினால் கூழ் போல ஆகிவிடும் .
2.அதிக எண்ணெய் இல்லாத சத்து மிக்க ஒரு உணவு .
3.உடனடியாக செய்யக்கூடியது
4.அனைவருக்கும் ஏற்ற காலை உணவு
5. மாலை சிற்றுண்டி மற்றும் இரவு உணவுக்கும் ஏற்றது .
6.கொத்தமல்லி இலை இருந்தால் பொடியாக வெட்டி கார சேமியாவில் கடைசியில் தூவி விடலாம்
Monday, 14 June 2021
WheatFlour Puttu/கோதுமைமாவு புட்டு
தேவையான பொருட்கள்
இனிப்பு புட்டு
வறுத்த கோதுமை மாவு 200 கிராம்
நாட்டு சர்க்கரை 6 டீஸ்பூன்
தேங்காய் துருவியது 4 டீஸ்பூன்
ஏலக்காய் 2 பொடித்தது
நெய் 2 டீஸ்பூன்
கார புட்டு
வறுத்த கோதுமை மாவு 200 கிராம்
பெரிய வெங்காயம் 1
பச்சை மிளகாய் 2
கறிவேப்பிலை
எண்ணெய் 2 டீஸ்பூன்
கடுகு 1 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய் 1
உளுந்தம்பருப்பு 2 டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு
செய்முறை
1. வறுத்த கோதுமை மாவு எல்லாவற்றையும் (200+200= 400 கிராம் ) துளியளவு உப்பு சேர்த்து ,
சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து புட்டு மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும் .
2. பின் இட்லி பாத்திரத்தில் 5 நிமிடங்கள் வேக வைத்து எடுத்துக்கொள்ளவும்
பாதி அளவு மாவில் (200 கிராம்) தேங்காய் ,
நாட்டு சர்க்கரை,நெய் மற்றும் ஏலக்காய்
பொடி சேர்த்து நன்றாக கிளறி மூடி வைக்கவும் .
சுவையான இனிப்பு புட்டு தயார்
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு ,உளுத்தம்பருப்பு ,கறிவேப்பிலை ,சிவப்பு மிளகாய் போட்டு தாளித்து அத்துடன் பொடியாக வெட்டிய பெரிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து கிளறவும். நன்கு வெங்காயம் வதங்கியதும் சிறிது உப்பு சேர்த்து கிளறி பின் வெந்த கோதுமை மாவையும் சேர்த்து கிளறி இறக்கி மூடி வைக்கவும் .
சுவையான கார புட்டு தயார்
பி.கு
1. கோதுமையை வறுத்து மாவு தயாரித்தால் மிக சுவையாக இருக்கும்.
கோதுமை மாவு கைவசம் இருந்தால் அதை வறுத்தும் செய்யலாம்
2.எண்ணெய் இல்லாத சத்து மிக்க ஒரு உணவு .
3.உடனடியாக செய்யக்கூடியது
4.அனைவருக்கும் ஏற்ற காலை உணவு
5. மாலை சிற்றுண்டி மற்றும் இரவு உணவுக்கும் ஏற்றது
Thursday, 10 June 2021
RICE KANCHI/அரிசி கஞ்சி
தேவையான பொருட்கள்
புழுங்கல் அரிசி 200 கிராம்
பச்சை பயறு 50 கிராம்
இஞ்சி சிறிதளவு
தேங்காய் துருவியது 2 மேஜைக்கரண்டி
சீரகம் 2 டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு
செய்முறை
1. அரிசி+பச்சைப்பயறு நன்றாக களைந்து 1/2 மணி நேரம் ஊற விடவும்
2. பின் 750 மிலி தண்ணீர் +பொடியாக வெட்டிய இஞ்சி சேர்த்து குக்கரில் நன்றாக வேகவைத்து எடுத்துக்கொள்ளவும் 3. அத்துடன் தேங்காய் ,சீரகம் , தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும் .
சுவையான அரிசி கஞ்சி தயார்
பி.கு
![]() |
| பீட்ரூட் தொகையல் |
2.எண்ணெய் இல்லாத சத்து மிக்க ஒரு உணவு .
3.பத்திய சாப்பாட்டிற்கு ஏற்றது .
4.அனைவருக்கும் ஏற்ற காலை உணவு
5..பீட்ரூட் தொகையலுடன் சாப்பிட அருமையாக இருக்கும்
Monday, 7 June 2021
POTATO MASAL/உருளைக்கிழங்கு மசாலா
உருளை கிழங்கு 1/4 கிலோ
பெரிய வெங்காயம் 2
தக்காளி 1
பச்சை மிளகாய் 2
உப்பு தேவையான அளவு
மஞ்சள் பொடி சிறிது
பொட்டுக்கடலை 2 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய் 2
தாளிக்க
கடலை எண்ணெய் /நல்லெண்ணெய் 2 தேக்கரண்டி
கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு 1 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய் 2
மசாலா சாமான்
சோம்பு ,பட்டை ,பிரிஞ்சி இலை சிறிது
ஏலம் 1, லவங்கம் 1
கறிவேப்பிலை
கொத்தமல்லி
செய்முறை
1. உருளை கிழங்கை குக்கரில் வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்
2. உருளைக்கிழங்கு தோல் உரித்து சிறிய துண்டகளாக்கி கொள்ளவும் 3. சிறிது எண்ணையில் தாளிக்க கொடுத்துள்ளவற்றை தாளித்து
1.பூரியுடன் சேர்த்து சாப்பிட அருமையானது, சுவையானது மற்றும் பொருத்தமானது
அத்துடன் பொடியாக வெட்டிய வெங்காயம் தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
4, நன்றாக வதங்கிய பின் உப்பு மற்றும் மஞ்சள் பொடி
சேர்த்து நன்றாக பொடி வாசனை போகும் வரை கிளறவும் .
சேர்த்து நன்றாக பொடி வாசனை போகும் வரை கிளறவும் .
5 உருளைக்கிழங்கு சேர்த்து கிளறி பின் 250 மிலி தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்
6,பொட்டுக்கடலையை+ வரமிளகாய் 2 மிக்ஸியில் நைசாக பொடியாக்கி மேலே தூவி கிளறவும்
7. ஒன்று சேர்த்து கிளறியபின் அடுப்பை அணைத்து விடவும்
8 ஒரு கிண்ணத்தில் எடுத்து .பொடியாக்கிய கொத்தமல்லி இலையை மேலேதூவி விட்டு அலங்கரிக்கவும்
ஹோட்டல் பக்குவத்தில் சுவையான உருளைக்கிழங்கு மசால் தயார்
1.பூரியுடன் சேர்த்து சாப்பிட அருமையானது, சுவையானது மற்றும் பொருத்தமானது
2.காரம் தேவைப்பட்டால் பச்சை/வர மிளகாய் சேர்த்துக்கொள்ளலாம்
Wednesday, 2 June 2021
Neem leaf kasayam/ வேப்பிலை கஷாயம்
தேவையான பொருட்கள்
(3 நபர்களுக்கு )
வேப்பிலை 20
பூண்டு 12
செய்முறை
1.வேப்பிலையை சுத்தம் செய்து பூண்டு 10 பல் சேர்த்து 500 மிலி நீரில் நன்றாக கொதிக்க விடவும் .
2.நீர் 300 மிலி ஆக வற்றிய பின் வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்
வேப்பிலை கஷாயம் தயார் .
பின் குறிப்பு
1. சளி மற்றும் இருமலுக்கு சிறந்த கஷாயம்
2.வயிற்று பூச்சியை போக்க வல்லது
3.நல்ல செரிமானம் மற்றும் பசி எடுக்க சிறந்த மருந்து.
4. மேலே குறிப்பிட்ட அளவு 3 நபர்களுக்கு போதுமானது
5. பூண்டு உரிக்காமல் அப்படியே வேக விடலாம்
4. மேலே குறிப்பிட்ட அளவு 3 நபர்களுக்கு போதுமானது
5. பூண்டு உரிக்காமல் அப்படியே வேக விடலாம்
6. கஷாயம் குடித்த பிறகு பூண்டை உரித்து சாப்பிடலாம்
Tuesday, 1 June 2021
WaterMelon Juice
தர்பூசணி ஜூஸ்
(2 டம்ளர் ஜூஸ் )
தர்பூசணி 2 கப்
தேன் 1 தேக்கரண்டி
எலுமிச்சை ஜூஸ் 1/2 தேக்கரண்டி
செய்முறை
1.தர்பூசணியை சிறிய துண்டுகளாக்கி கொள்ளவும்.
2.மிக்ஸியில் போட்டு அரைத்து வடிகட்டி கொள்ளவும்.
சிறிது தண்ணீர் சேர்த்து 2வது முறையும் அரைத்து வடித்துக் கொள்ளலாம்
3.அதன்பின் தேன் ,எலுமிச்சை சாறு கலந்து கொள்ளவும்.
சுவையான தர்பூசணி ஜூஸ் தயார் .
பி .கு
1.குளிர்ச்சியாக வேண்டும் எனில் சிறிது நேரம் பிரிட்ஜ்-ல் வைத்து குடிக்கலாம்
2.தர்பூசணி அரைக்கும் பொழுது எலுமிச்சை சாறு ,தேன் சேர்க்கவே கூடாது
3.வடிகட்டிய பின் உள்ள விழுதை வீட்டில் வளர்க்கும் செடிகளுக்கு உரமாக போடலாம்
3.கோடை வெயிலுக்கு உகந்த குளிர்ச்சியூட்டும் சத்தான பானம் .
Subscribe to:
Comments (Atom)
















