Monday, 30 November 2015

POTATO MASAL/உருளை கிழங்கு மசாலா கறி

தேவையான பொருட்கள் 


உருளைக்கிழங்கு 1/4 கிலோ  
உப்பு சிறிதளவு 
வரமிளகாய் பொடி (அ ) கரி மசாலா பொடி தேவையான அளவு 
மஞ்சள் பொடி சிறிது 
தாளிக்க - கடுகு ,உளுத்தம்பருப்பு ,1 சிவப்பு மிளகாய்  மற்றும் கறிவேப்பிலை 

செய்முறை

 உருளை கிழங்கை  குக்கரில்  வேகவைத்து எடுத்துக்கொள்ளவும் 
உருளைக்கிழங்கு தோல் உரித்து சிறிய துண்டகளாக்கி கொள்ளவும் 
சிறிது  எண்ணையில் தாளிக்க கொடுத்துள்ளவற்றை தாளித்து . 
அத்துடன் உப்பு வரமிளகாய் பொடி(அ )மசாலா பொடி மற்றும் மஞ்சள் பொடி 
 நன்றாக பொடி வாசனை போகும் வரை  கிளறவும் . பின் அடுப்பை அணைத்து விடவும்  


Optional:

தாளிக்கும் பொழுது பொடியாக நறுக்கிய வெங்காயம் சிறிதளவு,ஒரு பச்சைமிளகாய் மற்றும் ஒரு தக்காளி சேர்க்கலாம் .

கொத்தமல்லி இலை  பொடியாக நறுக்கி கடைசியில் மேலே தூவி விடலாம்  . .

Sunday, 29 November 2015

தக்காளி வெங்காய சட்னி

தக்காளி வெங்காய சட்னி

தேவையான பொருட்கள் 

தக்காளி 2
வெங்காயம் 2
சிவப்பு மிளகாய் 6 
புளி  அரை நெல்லிக்காய் அளவு 
உப்பு தேவையான அளவு 
கடுகு சிறிது 
உளுத்தம்பருப்பு சிறிது 


செய்முறை

வாணலியில்  1 தேக்கரண்டி  நல்லெண்ணெய் விட்டு கடுகு வெடித்தபின் ,உளுத்தம்பருப்பு ,சிவப்பு மிளகாய் ,வெங்காயம் ,தக்காளி இவற்றை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு  வதக்கி எடுத்துக் கொள்ளவும் .
அத்துடன் உப்பு ,புளி சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும் .

அருமையான சட்னி  தயார் 

Optional:

கறிவேப்பிலையையும் சேர்த்து வதக்கி அரைக்கலாம் 
கொத்தமல்லியை அரைக்கும்பொழுது  சேர்த்து அரைக்கலாம் 

பின் குறிப்பு 

இட்லி ,தோசைக்கு தொட்டுக்கொள்ள பொருத்தமான சட்னி . 

பருப்பு துவையல

பருப்பு துவையல் 

தேவையான பொருட்கள் 

துவரம் பருப்பு (அ )பயத்தம்பருப்பு  50 கிராம் 
பூண்டு  1-2 துண்டுகள்
சிவப்பு மிளகாய் 2
உப்பு  தேவைகேற்ப 

செய்முறை

வெறும் வாணலியில் பருப்பை நன்றாக சிவக்க வறுத்து  எடுத்து ஆறியபின் மிக்ஸியில் பூண்டு,மிளகாய் ,உப்பு சேர்த்து நைசாக பொடி  செய்து பின் தண்ணீர் சேர்த்து அரைத்தால் பருப்பு துவையல் தயார் .

பின் குறிப்பு 

 மிளகு குழம்புடன் சேர்த்து சாப்பிட நல்ல பொருத்தமானதாக இருக்கும் .

மிளகுக்குழம்பு (பூண்டுடன் )

தேவையான பொருட்கள் 


பூண்டு  10-15 துண்டுகள்
சிறிய வெங்காயம் 10-15
புளி  நெல்லிக்காய் அளவு 
உப்பு  தேவைகேற்ப 
அரைக்க 
துவரம் பருப்பு  2 மேஜைகரண்டி 
மிளகு 1மேஜைகரண்டி
சிவப்பு மிளகாய்  தேவைக்கேற்ப
தாளிக்க - கடுகு ,வெந்தயம்,பெருங்காயம் ,துவரம்பருப்பு 1 தேக்கரண்டி ,1 சிவப்பு மிளகாய்  மற்றும் கறிவேப்பிலை 

செய்முறை

வெறும் வாணலியில் அரைக்க கொடுத்துள்ளவற்றை நன்றாக சிவக்க வறுத்து  எடுத்து ஆறியபின் மிக்ஸியில் நைசாக பொடி  செய்து வைத்துக்கொள்ளவும் .

வாணலியில்  1 மேஜைகரண்டி நல்லெண்ணெய் விட்டு தாளிக்க  கொடுத்துள்ளவற்றை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு தாளித்து பின் பூண்டு மற்றும் சிறிய வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும் . பிறகு உப்பு மற்றும் புளி  கரைசலை விடவும் . புளி  வாசனை போகும் வரை /பூண்டு வெங்காயம் வேகும்வரை கொதிக்க விடவும்.பின் அரைத்து  வைத்துள்ள பொடியை சேர்த்து கொதிக்க விட்டு இறக்கி வைக்கவும் .


அருமையான மிளகு குழம்பு தயார் 


Optional:

சிறிது சுண்ட வத்தல் /மணத்தக்காளி  வத்தல்  வறுத்து  இறுதியில் சேர்க்கலாம் .
தேவைப்பட்டால்  சம்பார்பொடி சிறிது சேர்க்கலாம் .

பின் குறிப்பு 

சளி  பிடித்திருந்தாலோ வயிறு பிரச்சனை இருந்தாலோ இந்த மிளகு குழம்பு செய்து சாப்பிட உடனடி நிவாரணம் கிடைக்கும் .


Wednesday, 25 November 2015

கத்தரிக்காய் +உருளை கிழங்கு வதக்கல் கறி

தேவையான பொருட்கள் 

காய் - கத்தரிக்காய்  மற்றும் உருளை கிழங்கு
உப்பு சிறிதளவு 
வரமிளகாய் பொடி தேவையான அளவு 
தாளிக்க - கடுகு ,உளுத்தம்பருப்பு ,1 சிவப்பு மிளகாய்  மற்றும் கறிவேப்பிலை 

செய்முறை

கத்தரிக்காய்  மற்றும் உருளை கிழங்கு காயை நறுக்கி எண்ணெய் விட்டு நன்றாக வதக்கவும் .
அத்துடன் உப்பு மற்றும் வரமிளகாய் பொடி சேர்த்து  பின் 

சிறிது  எண்ணையில் தாளிக்க கொடுத்துள்ளவற்றை தாளித்து இறக்கி வைக்கவும் . 



Optional:

தாளிக்கும் பொழுது பொடியாக நறுக்கிய வெங்காயம் சிறிதளவு,ஒரு பச்சைமிளகாய் மற்றும் ஒரு தக்காளி சேர்க்கலாம் .

கொத்தமல்லி இலை  பொடியாக நறுக்கி கடைசியில் மேலே தூவி விடலாம்  . .

VADAKKAL - SIDE DISH

தேவையான பொருட்கள் 

காய் - வெண்டைக்காய் ,கத்தரிக்காய்  ஏதாவது  ஒன்று
உப்பு சிறிதளவு 
தாளிக்க - கடுகு ,உளுத்தம்பருப்பு ,1 சிவப்பு மிளகாய்  மற்றும் கறிவேப்பிலை 

செய்முறை

காயை எண்ணெய் விட்டு நன்றாக வதக்கவும் .
அத்துடன் உப்பு மற்றும் வரமிளகாய் பொடி சேர்த்து  பின் 

சிறிது  எண்ணையில் தாளிக்க கொடுத்துள்ளவற்றை தாளித்து இறக்கி வைக்கவும் . 



Optional:

தாளிக்கும் பொழுது பொடியாக நறுக்கிய வெங்காயம் சிறிதளவு,ஒரு பச்சைமிளகாய் மற்றும் ஒரு தக்காளி சேர்க்கலாம் .

கொத்தமல்லி தலை பொடியாக நறுக்கி கடைசியில் மேலே தூவி விடலாம்  . .

PORIYAL

தேவையான பொருட்கள் 

காய் - முட்டைக்கோஸ் ,காரட்,பீன்ஸ் ,அவரைக்காய் ,சௌசௌ  ஏதாவது  ஒன்று
உப்பு சிறிதளவு 
தேங்காய் பூவாக சிறிதளவு 
தாளிக்க - கடுகு ,உளுத்தம்பருப்பு ,1 சிவப்பு மிளகாய் , 2 பச்சைமிளகாய்  மற்றும் கறிவேப்பிலை 

செய்முறை

காயை உப்பு சேர்த்து வேகவைத்து எடுத்துக்கொள்ளவும் .

சிறிது  எண்ணையில் தாளிக்க கொடுத்துள்ளவற்றை தாளித்து ,காய் மற்றும் தேங்காய் பூவை சேர்த்து கிண்டிஇறக்கி வைக்கவும் . 



Optional:


காயுடன்  ஒரு ஸ்பூன் பயத்தம்பருப்பை சேர்த்து வேகவைத்து எடுத்துக்கொள்ளலாம் .

தாளிக்கும் பொழுது பொடியாக நறுக்கிய வெங்காயம் சிறிதளவு சேர்த்து வதக்கி பின் காய் மற்றும் தேங்காயை சேர்க்கலாம் .
கொத்தமல்லி தலை பொடியாக நறுக்கி கடைசியில் மேலே தூவி விடலாம்  . .

Monday, 23 November 2015

PARUPPU RASAM

தேவையான பொருட்கள் 

துவரம்பருப்பு சிறிதளவு
உப்பு சிறிதளவு 
புளி சிறிதளவு 
அரைக்க - மிளகு,சீரகம் தலா 1 ஸ்பூன் ,பூண்டு 3 பல், 1 (அ )2 சிவப்பு மிளகாய் ,  தக்காளி ஒன்று .  
தாளிக்க - கடுகு ,1 சிவப்பு மிளகாய் ,பெருங்காயம் மற்றும் கறிவேப்பிலை 

செய்முறை

துவரம்பருப்பை வேகவைத்து எடுத்துக்கொள்ளவும் .

மிக்சியில் அரைக்க கொடுத்துள்ளவற்றுடன் பாதி தக்காளி சேர்த்து ஒன்றிரண்டாக (நைசாக அரைக்கத் தேவையில்லை ) அரைத்துக்கொள்ளவும் .

அத்துடன் உப்பு , புளி மற்றும்பாதி தக்காளியை சிறு துண்டகளாக்கி சேர்த்து தண்ணீரில்  கொதிக்க விடவும் .

நன்றாக கொதித்த பின் வேகவைத்த பருப்பை சேர்த்து ரசம் தேவையான அளவுக்கு தண்ணீர் சேர்த்து ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்து விடவும் .

சிறிது நெய் /நல்ல எண்ணையில் தாளிக்க கொடுத்துள்ளவற்றை தாளித்து போடவும்

பின்குறிப்பு

சாம்பாருக்காக பருப்பு வேகவைத்திருக்கும் சமயத்தில் பருப்பு தண்ணியை ரசத்திற்கு உபயோகித்துக் கொள்ளலாம் ..தனியாக பருப்பு வேகவைக்க தேவையில்லை 



Optional:

கொத்தமல்லி தலை பொடியாக நறுக்கி ரசத்தை அடுப்பிலிருந்து இறக்கியதும் சேர்த்தால்  ரசம் கூடுதல் மணத்துடன் கிடைக்கும் . .

simple kootu

தேவையான பொருட்கள் 

பயத்தம்பருப்பு
காய்கறி - முட்டைக்கோஸ் ,சௌசௌ ,பீர்க்கங்காய்   ஏதாவது ஒன்று
உப்பு
தாளிக்க -சீரகம் ,வெங்காயம் ,மிளகாய் வத்தல், பச்சைமிளகாய்  மற்றும் கறிவேப்பிலை

செய்முறை

பயத்தம்பருப்பு மற்றும் பொடியாக வெட்டிய காயை அடி கனமான பா த்திரத்தில்  தண்ணீரில் வேகவிடவும்  அல்லது குக்கரில் வேகவிடவும் .
வெந்ததும் உப்பு சேர்க்கவும் .
பொ டியாக வெட்டிய வெங்காயம் மற்றும் தாளிக்க கொடுத்துள்ள பிற பொருட்களையும் சிறிது எண்ணையில் தாளிக்கவும் . 


சுவையான கூட்டு  தயார் .

சாப்பிடலாம் வாங்க !!!  

பின்குறிப்பு

பயத்தம்பருப்பை இலேசாக வாசம் வரும்வரை வெறும் வாணலியில் எண்ணெய் இல்லாமல் வறுத்து உபயோகித்தால் நல்ல  கூடுதல் சுவை கிடைக்கும் .


Optional:

தேங்காய் ,சீரகம் மற்றும் சிவப்பு மிளகாய் மிக்சியில் அரைத்து விடலாம் .

Saturday, 21 November 2015

SIMPLE SAMBAR

அம்மாவின் கை பக்குவம் 

தேவையான பொருட்கள் 

துவரம்பருப்பு
காய்கறி - கத்தரிக் காய் ,பறங்கிக் காய்  ,அவரைக் காய்  ஏதாவது ஒன்று
உப்பு
புளி
சாம்பார்பொடி
தாளிக்க -கடுகு ,வெந்தயம்,மிளகாய் வத்தல் ,பெருங்காயம் , கறிவேப்பிலை
மற்றும் கொத்தமல்லி இலை

செய்முறை

துவரம்பருப்பை  குக்கரில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
அடி கனமான பா த்திரத்தில்  சிறிது தண்ணீரில் காயை வேகவிடவும்.
 சாம்பார்பொடி  மற்றும் உப்பு தேவையான அளவு சேர்க்கவும் 
காய் பாதி வெந்ததும்  புளி  தேவையான அளவு கரைத்து விடவும் 
நன்றாக காய்  வெந்த பிறகு வேகவைத்த பருப்பை சேர்க்கவும் .
ஒன்றாக சேர்ந்து கொதிக்க விடவும் 
கடா யில் நல்லெ ண்ணை  விட்டு கடுகு ,வெந்தயம்,மிளகாய் வத்தல் ,பெருங்காயம் , கறிவேப்பிலை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு தாளிக்கவும் .
கொத்தமல்லி இலையை பொடியாக வெட்டி மேலே தூவவும் .

சுவையான மணமணக்கும் சாம்பார் தயார் .

சாப்பிடலாம் வாங்க !!!  

பின்குறிப்பு 

பாகற்காய் ,வெண்டைக்காய் இவற்றை எண்ணெய் சிறிது விட்டு வதக்கி வேகவிடவும் 
கிழங்கு வகைகளை குக்கரில் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும் ..