Wednesday, 23 December 2015

CHILLI PAROTTA

சில்லி பரோட்டா

Serves: 2
Prep Time: 15 min
Cook Time: 20 min

தேவையான பொருள்கள்:
பரோட்டா: 4 (சிறிது)
குடை மிளகாய்:  1 (பெரிது)
வெங்காயம்: 1 (பெரிது)
தக்காளி: 2-3 (சிறிது)
வர மிளகாய்: 4(சிறிது)
சோம்பு: 1 டேபிள் ஸ்பூன்
முந்திரி: 4

அரைக்க:
வர மிளகாய்
சோம்பு
முந்திரி
இவை நன்றாக அரைந்த  பின், தக்காளியையும்  சேர்த்து அரைக்கவும்.

செய்முறை:
1. பரோட்டாவை சதுரமாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்
2. வெங்காயம், குடை மிளகாயையும் வெட்டிக் கொள்ளவும்
3. கடாயில் எண்ணெய் போட்டு, வெங்காயம், குடை மிளகாயை வதக்கவும்
4. அரைத்த  தக்காளி பேஸ்ட்ஐ போட்டு கொதிக்க விடவும்
5. உப்பு போடவும்
6. பரோட்டாவை போட்டு கிண்டவும்
7. தக்காளி நன்றாக ஊறிய பின், இறக்கி வைக்கவும்

குறிப்பு:
காரம் அதிகமாக இருந்தால் சிறிது நெய் போடவும்.
கொத்தமல்லி தூவிக் கொள்ளவும்.

கொத்தமல்லி சாதம்

தேவையான பொருட்கள்

 பச்சரிசி  200 கிராம் 
அரைக்க 
கொத்தமல்லி இலை 1 கட்டு சிறியது
 பச்சை மிளகாய் 3
பெரிய வெங்காயம் 2
தாளிக்க
கடுகு ,உளுத்தம்பருப்பு ,நிலக்கடலை ,பெருங்காயம் ,1 சிவப்பு மிளகாய்  மற்றும் கறிவேப்பிலை
மற்றும் 
 எலுமிச்சை சாறு 1 தேக்கரண்டி 
உப்பு தேவையான அளவு 


செய்முறை
பச்சரிசியை  2 1/2 பங்கு தண்ணீர் சேர்த்து குக்கரில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும் . சாதத்தை பெரிய பாத்திரத்தில் உதிர்த்து ஆற விடவும் .
அரைக்க கொடுத்துள்ளவற்றை அரைத்து எடுத்துக் கொள்ளவும் 

 சிறிது  நல்லெண்ணையில்  தாளிக்க கொடுத்துள்ளவற்றை தாளித்து அத்துடன் அரைத்து வைத்துள்ளதை சேர்த்து வதக்கவும் .

பின் சாதத்தில் சேர்க்கவும்  .உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து  சிறிது நல்ல எண்ணெய் சேர்த்து  கிளறவும்  . 

சுவையான கொத்தமல்லி   சாதம் தயார் .
Optional:

கொத்தமல்லி இலை  பொடியாக நறுக்கி கடைசியில் மேலே தூவி விடலாம்  .
தாளிக்கும் பொழுது முந்திரி,நிலக்கடலை   இவற்றை அவரவர் விருப்பப்படி சேர்த்துக் கொள்ளலாம் .

அவியல்

தேவையான பொருட்கள் 
உருளைக் கிழங்கு
பீன்ஸ்
காரட்
கத்தரிக் காய்
முருங்கை காய்  தலா 100 கிராம்

அரைக்க
பச்சை மிளகாய்  3
தேங்காய் அரை மூடி துருவியது
சீரகம்  1 தேக்கரண்டி

தாளிக்க
தேங்காய் எண்ணெய்  1 மேசைக் கரண்டி
வெங்காயம் பொடியாக வெட்டியது
பச்சை மிளகாய் 2
கடுகு  1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு  1 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் 1
பெருங்காயம்
சீரகம்
கறிவேப்பிலை

மற்றும்
கெட்டித் தயிர்  200 கிராம்
உப்பு தேவையான அளவு


செய்முறை

காய்களை நீளவாக்கில் சிறு துண்டுகளாக வெட்டி எடுத்து தண்ணீரில் உப்பு போட்டு வேகவிடவும்.
தாளிக்க கொடுத்துள்ளவற்றை தேங்காய் எண்ணையில் தாளித்து சேர்க்கவும் .

அரைக்க கொடுத்துள்ளவற்றை சட்னி பதத்தில் அரைத்து அத்துடன் சேர்க்கவும்  

கெட்டித் தயிரை நன்றாக கடைந்து சேர்க்கவும்  

சுவையான அவியல்  தயார் . 

பின் குறிப்பு 
கொத்தமல்லி இலை பொடியாக வெட்டி கடைசியில் சேர்க்கலாம் .


அடை



தேவையான பொருட்கள் 

புழுங்கல் அரிசி  100கிராம்
பச்சரிசி  100 கிராம்                          
கடலைபருப்பு 50 கிராம்
துவரம்பருப்பு  50 கிராம்
உளுத்தம்பருப்பு 25 கிராம்

தேங்காய் அரை மூடி
சிவப்பு மிளகாய் 3
பச்சை மிளகாய்  2
உப்பு தேவையான அளவு
சீரகம் 1 தேக்கரண்டி
பெருங்காயம்
கறிவேப்பிலை

செய்முறை

புழுங்கல்  அரிசி மற்றும் பருப்பு வகைகளை 4 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். .
அரைக்கும் பொழுது அத்துடன் சிவப்பு மிளகாய் , பச்சை மிளகாய், தேங்காய் பூவாக துருவியது , சீரகம் மற்றும் உப்பு சேர்த்து அரைத்து  எடுத்துக்கொள்ளவும்.
மாவுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம்,பெருங்காயம்  மற்றும் கறிவேப்பிலை சேர்க்கவும்.
இட்லி மாவு பதத்தில் மாவை எடுத்துக் கொள்ளவும் .

மாவை  தோசைக் கல்லில் அடையாக ஊற்றி  சிறிது எண்ணெய் விட்டு திருப்பி விட்டு எடுக்கவும்

சுவையான அடை தயார் . 

Monday, 14 December 2015

அரிசி ரொட்டி

தேவையான பொருட்கள் 

புழுங்கல் அரிசி  200கிராம்                            
தேங்காய் அரை மூடி
சிவப்பு மிளகாய் 3
உப்பு தேவையான அளவு
சீரகம் 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை

செய்முறை

புழுங்கல்  அரிசியை 4 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும் .
அரிசியுடன் தேங்காய் பூவாக துருவியது ,சிவப்பு மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து அரைத்து  எடுத்துக்கொள்ளவும்.
மாவுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம்,சீரகம் மற்றும் கறிவேப்பிலை சேர்க்கவும் .

மாவை சிறு சிறு ரொட்டியாக தோசைக் கல்லில் தட்டி சிறிது எண்ணெய் விட்டு திருப்பி விட்டு எடுக்கவும் 

Friday, 11 December 2015

எலுமிச்சை சாதம்


தேவையான பொருட்கள் 
 பச்சரிசி  200 கிராம் 
எலுமிச்சை 2
உப்பு தேவையான அளவு 
பச்சை மிளகாய் 3
மஞ்சள் பொடி  1 தேக்கரண்டி 
தாளிக்க - கடுகு ,உளுத்தம்பருப்பு ,பெருங்காயம் ,1 சிவப்பு மிளகாய்  மற்றும் கறிவேப்பிலை 

செய்முறை
பச்சரிசியை  2 1/2 பங்கு தண்ணீர் சேர்த்து குக்கரில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும் . சாதத்தை பெரிய பாத்திரத்தில் உதிர்த்து ஆற விடவும் 
 சிறிது  எண்ணையில் தாளிக்க கொடுத்துள்ளவற்றை தாளித்து அத்துடன் பொடியாக வெட்டிய பச்சை மிளகாய் மற்றும் மஞ்சள் பொடியை  சேர்த்து சாதத்தில் சேர்க்கவும் .உப்பு மற்றும் எலுமிச்சை சாறு எடுத்ததை  அத்துடன் சேர்த்து சிறிது நல்ல எண்ணெய் சேர்த்து  கிளறவும்  . 

சுவையான எலுமிச்சை  சாதம் தயார் .
Optional:

கொத்தமல்லி இலை  பொடியாக நறுக்கி கடைசியில் மேலே தூவி விடலாம்  .
தளிக்கும் பொழுது முந்திரி,நிலக்கடலை ,பொட்டுகடலை   இவற்றை அவரவர் விருப்பப்படி சேர்த்துக் கொள்ளலாம் .

தயிர் சாதம்

தேவையான பொருட்கள் 
 பச்சரிசி  200 கிராம் 
பால் 250 மிலி 
உப்பு தேவையான அளவு 
பச்சை மிளகாய் 2
இஞ்சி சிறிதளவு 
தாளிக்க - கடுகு ,உளுத்தம்பருப்பு ,பெருங்காயம் ,1 சிவப்பு மிளகாய்  மற்றும் கறிவேப்பிலை 

செய்முறை
பச்சரிசியை  3 பங்கு தண்ணீர் சேர்த்து குக்கரில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும் .
பின் எடுத்துக் கொண்டுள்ள பாலில் நன்றாக குழைய வேக விட்டு எடுத்துக் கொள்ளவும் .

சிறிது  எண்ணையில் தாளிக்க கொடுத்துள்ளவற்றை தாளித்து அத்துடன் பொடியாக வெட்டிய பச்சை மிளகாய் மற்றும் இஞ்சியை சேர்த்துசிறிது வதக்கி சாதத்தில் சேர்க்கவும் .உப்பு தேவையான அளவு சேர்த்து 2 தேக்கரண்டி தயிர் சேர்த்து கிளறவும்  . 

சுவையான கோவில் தயிர் சாதம் தயார் .
Optional:

கொத்தமல்லி இலை  பொடியாக நறுக்கி கடைசியில் மேலே தூவி விடலாம்  .
காரட் துருவியது ,முந்திரி வறுத்தது , திராட்சை  இவற்றை அவரவர் விருப்பப்படி சேர்த்துக் கொள்ளலாம் .
 .

Wednesday, 9 December 2015

உருளைக் கிழங்கு ,குடை மிளகாய் கறி


தேவையான பொருட்கள் 

குடை மிளகாய் 2
 உருளை கிழங்கு 2
வெங்காயம்  1
தக்காளி 1
உப்பு சிறிதளவு 
வரமிளகாய் பொடி தேவையான அளவு 
தாளிக்க - கடுகு ,உளுத்தம்பருப்பு ,1 சிவப்பு மிளகாய்  மற்றும் கறிவேப்பிலை 

செய்முறை

குடை மிளகாய்  மற்றும் உருளை கிழங்கு காயை நறுக்கி எண்ணெய் விட்டு நன்றாக வதக்கவும் .பாதி  வதங்கியதும் பொடியாக வெட்டிய வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்த்து வதக்கவும் .அத்துடன் உப்பு மற்றும் வரமிளகாய் பொடி சேர்த்து  பின் 

சிறிது  எண்ணையில் தாளிக்க கொடுத்துள்ளவற்றை தாளித்து இறக்கி வைக்கவும் . 
Optional:

கொத்தமல்லி இலை  பொடியாக நறுக்கி கடைசியில் மேலே தூவி விடலாம்  . .


Monday, 7 December 2015

வெங்காய பகோடா


வெங்காயம் 1
சோம்பு  1 தேக்கரண்டி
கறிவேப்பிலை
உ ப்பு சிறிதளவு 
வரமிளகாய் பொடி  தேவையான அளவு 
 கடலை மாவு 200 கிராம் 
அரிசி மாவு  50 கிராம் 
பொ ரித்தெடுக்க  தேவையான கடலை எண்ணெய் அல்லது சூரியகாந்தி எண்ணெய்(250 கிராம் )


செய்முறை

வெங்காயத்தை  பொடியாக வெட்டிக் கொள்ளவும் 

கடலை மாவு மற்றும் அரிசி மாவு 4:1 என்ற விகிதத்தில் எடுத்துக்கொண்டு தேவையான அளவு உப்பு , மிளகாய்ப்பொடி சோம்பு , பொடியாக வெட்டிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை   சேர்த்து சூடான எண்ணெய் 1 தேக்கரண்டி  சேர்த்து  லேசாக தண்ணீர் தெளித்து பிசறி வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் கடலை எண்ணெய் அல்லது சூரியகாந்தி எண்ணெயை சூடு பண்ணவும் .

தயாராக வைத்துள்ள மாவை எண்ணெயில் உதிராக உதிர்த்து விடவும்.
(சிறிது சிவக்க வேக வைத்து)   எண்ணெயில் பொறித்து எடுக்கவும் .

சூடான சுவையான வெங்காய பகோடா  தயார் . 


Optional:

தேவைப்பட்டால் சிறிது சோடா உப்பு மாவுடன்  சேர்த்துக் கொள்ளலாம்  

Sunday, 6 December 2015

உருளை கிழங்கு போண்டா

தேவையான பொருட்கள்

உருளை கிழங்கு 2
வெங்காயம் 1
உ ப்பு சிறிதளவு 
வரமிளகாய் பொடி (அ ) கரி மசாலா பொடி தேவையான அளவு 
மஞ்சள் பொடி சிறிது 
தாளிக்க - கடுகு ,உளுத்தம்பருப்பு ,1 சிவப்பு மிளகாய்,சோம்பு   மற்றும் கறிவேப்பிலை
 கடலை மாவு 
அரிசி மாவு 
பொ ரித்தெடுக்க  தேவையான கடலை எண்ணெய் அல்லது சூரியகாந்தி எண்ணெய்


செய்முறை

உருளை கிழங்கை  குக்கரில்  வேகவைத்து எடுத்துக்கொள்ளவும் 
உருளைக்கிழங்கு தோல் உரித்து சிறிய துண்டகளாக்கி மசித்து கொள்ளவும் 
சிறிது  எண்ணையில் தாளிக்க கொடுத்துள்ளவற்றை தாளித்து  பொடியாக வெட்டிய வெங்காயம் சேர்த்து அத்துடன் உப்பு வரமிளகாய் பொடி(அ )மசாலா பொடி மற்றும் மஞ்சள் பொடி சேர்த்து  நன்றாக பொடி வாசனை போகும் வரை  கிளறவும் . பின் அடுப்பை அணைத்து விடவும் .
நன்றாக ஆறியபின் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்  



கடலை மாவு மற்றும் அரிசி மாவு 4:1 என்ற விகிதத்தில் எடுத்துக்கொண்டு தேவையான அளவு உப்பு மற்றும் மிளகாய்ப்பொடி சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளவும்

வாணலியில் கடலை எண்ணெய் அல்லது சூரியகாந்தி எண்ணெயை சூடு பண்ணவும் .

உருட்டி   வைத்துள்ள உருண்டைகளை கரைத்து வைத்துள்ள மாவில் ஒவ்வொன்றாக மூழ்கி எடுத்து கொதிக்கும்  எண்ணெயில் பொறித்து எடுக்கவும் .

சூடான சுவையான உருளை  போண்டா  தயார் . 


Optional:

தேவைப்பட்டால் சிறிது சோடா உப்பு மாவுடன்  சேர்த்துக் கொள்ளலாம்  
.கொத்தமல்லி இலை  பொடியாக நறுக்கி உருளை கிழங்கு மசாலுடன் சேர்த்துக் கொள்ளலாம் . 

Friday, 4 December 2015

BAJJI

பஜ்ஜி 

தேவையான பொருட்கள் 

உருளை கிழங்கு 1
வெங்காயம் 1
வாழைக்காய் 1
உப்பு சிறிதளவு 
வரமிளகாய் பொடி 
கடலை மாவு 
அரிசி மாவு 
பொ ரித்தெடுக்க  தேவையான கடலை எண்ணெய் அல்லது சூரியகாந்தி எண்ணெய் 

செய்முறை

உருளை கிழங்கு ,வெங்காயம்,வாழைக்காயை மெல்லிய துண்டுகளாக வட்டமாக வெட்டிக்கொள்ளவும்.  

கடலை மாவு மற்றும் அரிசி மாவு 4:1 என்ற விகிதத்தில் எடுத்துக்கொண்டு தேவையான அளவு உப்பு மற்றும் மிளகாய்ப்பொடி சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளவும்

வாணலியில் கடலை எண்ணெய் அல்லது சூரியகாந்தி எண்ணெயை சூடு பண்ணவும் .

வெட்டி  வைத்துள்ள காய் துண்டுகளை கரைத்து வைத்துள்ள மாவில் ஒவ்வொன்றாக மூழ்கி எடுத்து கொதிக்கும்  எண்ணெயில் பொறித்து எடுக்கவும் .

சூடான சுவையான உருளை ,வெங்காயம் மற்றும் வாழைக்காய் பஜ்ஜி தயார் . 


Optional:

தேவைப்பட்டால் சிறிது சோடா உப்பு மாவுடன்  சேர்த்துக் கொள்ளலாம்  .

Tuesday, 1 December 2015

நீர் உருண்டை


தேவையான பொருட்கள் 

புழுங்கல் அரிசி  200கிராம்                              
தேங்காய் அரை மூடி
உப்பு தேவையான அளவு
நல்லெண்ணெய் 1  மேஜைக்கரண்டி
தாளிக்க
நெய்   1  மேஜைக்கரண்டி
சீரகம் 1 மேஜைக்கரண்டி
சிவப்பு மிளகாய்
கறிவேப்பிலை


செய்முறை

புழுங்கல்  அரிசியை 4 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும் .
அரிசியுடன் தேங்காய் பூவாக துருவியது மற்றும் உப்பு சேர்த்து அரைத்து  எடுத்துக்கொள்ளவும்.
வாணலியில்  நல்லெண்ணெய் விட்டு அரைத்த மாவை கொஞ்சம் கெட்டியாகும் வரை கிளறவும். பின்  சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும் 
உருண்டைகளை இட்லி பாத்திரத்தில் இட்லி வேக வைப்பது போல வேகவைத்து எடுத்துக்கொள்ளவும் .
வாணலியில் நெய்யை விட்டு சீரகம்,சிவப்பு மிளகாய் மற்றும் கறிவேப்பிலை போட்டு வேகவைத்து எடுத்த உருண்டைகளை போட்டு கிளறி எடுக்கவும் .

சுவையான மணக்கும் நீர் உருண்டை தயார் .

 Optional:

மாவை கிளறும்  பொழுது  பொடியாக நறுக்கிய வெங்காயம் சிறிதளவு,சேர்க்கலாம் .

பின் குறிப்பு 

எண்ணெய்  இல்லாத இந்த அருமையான நீர் உருண்டை மாலை நேர சிற்றுண்டியாக உண்ணலாம் .

சளி பிடித்திருக்கும் சமயம் இந்த நீர் உருண்டையை செய்து உண்டால் சளியிலிருந்து  நிவாரணம் கிடைக்கும் .



. .