Monday, 31 May 2021

NEER KOLUKKATTAI

நீர் கொழுக்கட்டை  

தேவையான பொருட்கள்

பச்சரிசி  500 கிராம் 

தேங்காய் 1 மூடி (திருகியது)

நெய் 4  தேக்கரண்டி 

செய்முறை

1.அரிசியை களைந்து 1/2 மணி நேரம் ஊறவைக்கவும் .

2.அரிசியை தண்ணீரை வடித்து விட்டு சிறிது உலர விடவும் 

3.மிக்ஸியில் ஈர அரிசி  மாவாக அரைத்து சலித்து எடுத்துக் கொள்ளவும் 

4.மாவை 1-2 டீஸ்பூன் நீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து வைத்துக் கொள்ளவும் 

5. அடி கனமான ,அகலமான பாத்திரத்தில் 500 மிலி தண்ணீர் வைத்து கொதி வந்தபின் 

மாவை வடை போல தட்டி கொதிக்கும் நீரில் போடவும் . 

6. 3-4 போட்டு  அது வெந்து மேலே வந்த பிறகு  இன்னும் 3 -4 தட்டி போடவும் . இதுவும் மேலே வந்த பிறகு 3-4 போடவும்.இது போல எல்லா மாவையும் வடை போல தட்டி போட்டு வேக விடவும்.

7.நன்றாக வெந்த  பின் அடுப்பிலிருந்து இறக்கி விடவும் 

8.வடைகளை சல்லி  கரண்டியால் தண்ணீர் இல்லாமல் எடுத்து கொள்ளவும் 

9.கிண்ணத்தில் 2-3 எடுத்து அத்துடன் 1 டீஸ்பூன் நெய் மற்றும்  தேங்காய் பூ சேர்த்து   சூடாக சாப்பிடவும்.


சுவையான சத்தான நீர் கொழுக்கட்டை     தயார் . 

பி.கு 

1. சளி,இருமலுக்கு  சிறந்த மருந்து 
2. உப்பு சேர்க்க தேவையில்லை 
3.தேவைப்பட்டால் நாட்டு  சர்க்கரை தொட்டுக்கொள்ளலாம் 
3.வடை/கொழுக்கட்டைகளை எடுத்த பின் உள்ள மாவு தண்ணீரை உப்பு/வெல்லம் போட்டு  குடிக்கலாம் 



 

Tuesday, 25 May 2021

MASAL VADAI-மசால் வடை



                                                 மசால் வடை (20-22 எண்ணிக்கை )

தேவையான பொருட்கள் 

கடலை பருப்பு 200 கிராம் 
பெரிய வெங்காயம் 2
வாழைப்பூ 1 கப்  
சோம்பு 1 டீஸ்பூன் 
சிவப்பு மிளகாய் 4
பெருங்காயம் சிறிது 
கறிவேப்பிலை சிறிது 
கொத்தமல்லி சிறிது 
உப்பு சிறிதளவு 
அரிசி மாவு 1 மேஜைக்கரண்டி 
பொ ரித்தெடுக்க  தேவையான கடலை எண்ணெய் 

செய்முறை

1.கடலை பருப்பை 1 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும் .

2.வாழைப்பூவை சுத்தம் செய்து பொடியாக வெட்டிக்கொள்ளவும் 
3.வெங்காயம் பொடியாக வெட்டிக்கொள்ளவும் 
4.கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லியை பொடியாக வெட்டிக்கொள்ளவும் 
5.ஊறிய கடலை பருப்பை மிக்ஸியில் நீர் அதிகம் சேர்க்காமல் கொர கொரப்பாக அரைத்துக்கொள்ளவும் 
6.அத்துடன் பொடியாக்கிய வாழைப்பூ ,வெங்காயம் ,கறிவேப்பிலை ,கொத்தமல்லி மற்றும் சோம்பு ,பெருங்காயம், அரிசி மாவு ,உப்பு தேவையான அளவு சேர்த்து பிசைந்து கொள்ளவும் .
7. வாணலியில் கடலை  எண்ணெயை சூடு பண்ணவும் .
8.மாவை சிறு உருண்டைகளாக்கி பின் இரு புறமும் அழுத்தி 
  எண்ணெயில் பொறித்து எடுக்கவும் .

சூடான சுவையான வாழைப்பூ மசால் வடை தயார் 

பி.கு 
 1.வாழைப்பூ  சேர்க்காமலும் மசால் வடை செய்யலாம் 
2.காரம்  தேவைப்பட்டால் வரமிளகாய் பொடி சேர்க்கலாம் .
3. அரைக்கும்பொழுது ஒன்று இரண்டு முழு பருப்பு இருக்கட்டும் .அரைப்பட தேவையான தண்ணீர் மட்டுமே சேர்க்க வேண்டும்.அப்பொழுதுதான் கரகரப்பாக இருக்கும் 


Monday, 24 May 2021

Beetroot Thogaiyal - பீட்ரூட் தொகையல்


























தேவையான பொருட்கள் 
பீட்ரூட்  1 (150 கிராம்) 
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன் 
தேங்காய் 2 தேக்கரண்டி 
சிவப்பு மிளகாய் 3
புளி சிறிது 
உப்பு தேவைக்கேற்ப 
           
செய்முறை
  • பீட்ரூட்  தோல் நீக்கி சிறு துண்டுகளாக்கி வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • வெறும் வாணலியில் உளுந்தம் பருப்பு மற்றும் மிளகாய் வறுத்து  எடுத்துக் கொள்ளவும் .பின் தேங்காயை சிறிது சூடேற லேசாக வதக்கி கொள்ளவும்.
  • இவை எல்லாவற்றையும் புளி மற்றும்  சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுக்கவும்.
  • சுவையான சத்தான பீட்ரூட் தொகையல் தயார்.

பி.கு 
  1. சாதத்துடன் சேர்த்து சாப்பிட அருமையான பொருத்தம்.
  2. எண்ணெய்  இல்லாத மற்றும் சத்தான தொகையல்.
  3. பத்திய சாப்பாட்டுடன் மற்றும் கஞ்சியுடன் சாப்பிடலாம்.

Ingrdients
1 Beetroot (150 gms)
1 tsp Urad dal
2 tbsp Grinded coconut
3 Red dried chili
Pinch of Tamarind
Salt

Instructions
  • Peel the skin and cut the Beetroot into small cubes. Cook them in boiling water and keep them aside to cool down.
  • In a dry pan, fry the urad dal and chilies. Later add the coconut and sauté till it gets hot.
  • In a mixer. add the cooked beetroot, the fried urad daal, chillies, coconut, tamarind with salt and grid them. Add water to get a paste consistency.
  • Yummy Beetroot thogailyal is ready to be served.
Notes
  1. Add them to your white rice with a little ghee and enjoy instant lunch.
  2. Good with kanji and other detox foods like poridge, etc.
  3. Its oil-free, healthy and good for improving blood flow.

Thursday, 20 May 2021

COCONUT KALI

 தேங்காய் களி 

தேவையான பொருட்கள்

புழுங்கல் அரசி 200 கிராம் 

தேங்காய் 1 மூடி (திருகியது)

சித்தரத்தை சிறிது 

ஏலக்காய் 2

வெல்லம் /கருப்பட்டி 150கிராம் /தேவைக்கேற்ப 

நெய் 4  தேக்கரண்டி 

செய்முறை

1.சித்தரத்தையை தண்ணீரில் ஊறவிடவும்.

2.அரிசியை களைந்து 3 மணி நேரம் ஊறவைக்கவும் .

3.அரிசி +சித்தரத்தை +ஏலம்  தேங்காயுடன் சேர்த்து கிரைண்டரில் நைசாக அரைத்துக் கொள்ளவும் 

4.வெல்லம் /கருப்பட்டியை 50 மிலி தண்ணீரில் கரைத்து கொதிக்க வைத்து 

வடிகட்டிக்கொள்ளவும் 

5. அடி கனமான பாத்திரத்தில் 300 மிலி தண்ணீர் வைத்து கொதி வந்தபின் 

அரைத்து வைத்துள்ளதை  200 மிலி தண்ணீரில் கரைத்து சிறிது சிறிதாக ஊற்றி கிளறவும் .

ஈரக்கையால் தொட்டு பார்த்தால் கையில் ஒட்டாமல் வருவதுதான் பதம் .

அந்த பதம் வரும் வரையில் நன்றாக கிளறவும் . 

தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்துக்  கொள்ளலாம் .

6.நன்கு பதம் வந்ததும் வெல்லம்/கருப்பட்டி தண்ணீர் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

கிண்ணத்தில்  எடுத்து அதன் மேல் 1 டீஸ்பூன் ஊற்றி சூடாக சாப்பிடவும்.

சுவையான சத்தான தேங்காய் களி    தயார் . 

பி.கு 

1.சளி,இருமலுக்கு தேங்காய் களி சிறந்த மருந்து .


 


Tuesday, 18 May 2021

DRUMSTICK LEAVES PODI

முருங்கைக்கீரை பொடி 


தேவையான பொருட்கள் 


முருங்கைக்கீரை  1 கட்டு 
மிளகு    2     டீஸ்பூன்
சீரகம்    2     டீஸ்பூன்  
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன் 
கடலைப்பருப்பு   1டீஸ்பூன் 
சிவப்பு மிளகாய் 2

உப்பு தேவைக்கேற்ப      



செய்முறை

1.முருங்கைக்கீரையை ஆய்ந்து காம்புகள் இல்லாமல் இலைகளை எடுத்துக்கொள்ளவும் . சுத்தமாக 2 முறை அலசி தண்ணீரை வடிய விடவும் 
2.சுத்தமான துணியில் நிழல் காய்ச்சலில் நன்றாக காய விடவும்.
  3-4  நாட்களில் காய்ந்துவிடும் 
3.முருங்கைக்கீரையை மிக்ஸியில் பொடி  செய்து கொள்ளவும் 
4..வெறும் வாணலியில் உளுத்தம்பருப்பை,கடலைப்பருப்பு,மிளகு மற்றும் சீரகத்தை தனித்தனியாக  வறுத்து   எடுத்துக்கொள்ளவும்.
5.அந்த சூட்டில் 2 மிளகாய் சேர்க்கவும் 
5.எல்லாவற்றையும் மிக்ஸியில் பொடி செய்துபின் முருங்கைக்கீரை பொடி மற்றும் உப்பு சேர்த்து ஒன்றாக கலக்கவும்.

சுவையான ஆரோக்கியமான முருங்கைக்கீரை பொடி  தயார் .

பி .கு 

1.சாதத்திற்கு நெய்யுடன் போட்டு சாப்பிட அருமையான மற்றும் சத்தான பொடி 
2. மிளகு மற்றும் சீரகம் வறுக்காமல் பச்சையாகவும் சேர்க்கலாம் .வறுத்து செய்தல் வாசனையாக இருக்கும் 
3.பல வித சத்துக்கள் நிறைந்த முருங்கைக்கீரை அடிக்கடி உணவில் சேர்த்து வர இரத்தம்  சுத்தி கரிக்கப்படும் .இரும்பு சத்து கிடைக்கும். பல விதமான நோய்களிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும்.(For  further details pl refer GOOGLE)



Monday, 17 May 2021

MINT JUICE

புதினா ஜூஸ்

தேவையான பொருட்கள் 

புதினா ஜூஸ்
(4 டம்ளர் ஜூஸ் ) 

புதினா இலை 1 கைப்பிடி அளவு 
இஞ்சி துண்டு சிறியது 1
தேன் தேவையான அளவு 
எலுமிச்சை 1 1/2 பழம் 
தண்ணீர் 3 டம்ளர் 
ஐஸ் கட்டிகள் தேவைக்கு 



செய்முறை

1.புதினா தண்டை நீக்கி இலைகளை மட்டும் எடுத்து கொள்ளவும்.
2.இஞ்சியை தோல் சீவி எடுத்துக்கொள்ளவும் 
3.புதினா மற்றும் இஞ்சியை 
 சுத்தம் செய்து  கொள்ளவும்.
4.இஞ்சியை சிறிய துண்டுகளாக்கி புதினா இலையுடன் மிக்ஸியில்  போட்டு தேவையான  தண்ணீர் சேர்த்து (ஐஸ் கட்டிகளையும் சேர்க்கலாம்) அரைத்து வடிகட்டி கொள்ளவும் 
5.அதன்பின் தேன் ,எலுமிச்சை சாறு கலந்து கொள்ளவும்.
6.கண்ணாடி டம்ளர்களில் ஊற்றி  ஐஸ் கட்டிகளை சேர்க்கவும் 

சுவையான சத்தான  புதினா எலுமிச்சை  ஜூஸ்  தயார் .

பி .கு 

1. அரைக்கும் பொழுது எலுமிச்சை சாறு ,தேன்  சேர்க்கவே கூடாது 
2.செரிமானம் மற்றும் உடல் நலத்திற்கு உகந்தது 

Thursday, 13 May 2021

SABUDHANA BONDA

 

ஜவ்வரசி போண்டா 

 

தேவையான பொருட்கள் 


ஜவ்வரிசி 3/4 கப் 

புளித்த தயிர் 1 கப் 

தண்ணீர் 1/2 கப் 

சீரகம்   1 டீ   ஸ்பூன் 

நறுக்கிய வெங்காயம் 1/2 கப் 

மிளகாய் 2

கொத்தமல்லி இலை 2 டீ  ஸ்பூன்

இஞ்சி சிறிது 

அரிசி மாவு 1/4 கப் 

உப்பு தேவையான அளவு 


கடலை எண்ணை 200 கிராம் (பொரித்தெடுக்க) 

                               

செய்முறை

  • தண்ணீர் + புளித்த தயிருடன்  கெட்டியாக பெரிய உருண்டைகளாக உள்ள ஜவ்வரிசி சேர்த்து 5 மணி நேரம் ஊற வைத்துக்  கொள்ளவும் .
  • ஊறிய ஜவ்வரிசியுடன் நறுக்கிய வெங்காயம்,பச்சைமிளகாய் ,மல்லி தழை ,இஞ்சி மற்றும் அரிசி மாவு,உப்பு சேர்த்து நீர் சேர்க்காமல் கெட்டியாக பிசையவும்.
  • தேவைப்பட்டால் சிறிது நீர் சேர்த்தது க்கொள்ளலாம் .
  • வாணலியில் கடலை  எண்ணெயை சூடு பண்ணவும் .
  • கலவையை சிறு உருண்டைகளாக்கி ,நன்கு சூடான எண்ணையில் போட்டு மிதமான தீயில் சிவக்க பொரித்து எடுக்கவும் 

சுவையான ஜவ்வரிசி போண்டா  தயார் .

பி.கு :


1. புளித்த தயிர் இல்லாவிட்டால் கலவையில் 1 டீ ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கொள்ளலாம் 

2.அதிகமாக நீர் சேர்த்து அதை சமன் செய்ய அரிசி மாவு சேர்த்தால் ருசி மாறிவிடும் 

3.இதற்கு காரச்சட்னி  தொட்டு சாப்பிடலாம்.அற்புதமாக இருக்கும்.


Tuesday, 11 May 2021

CARROT JUICE

 காரட் ஜூஸ்

தேவையான பொருட்கள் 

(2 டம்ளர் ஜூஸ் ) 
காரட் 3
இஞ்சி துண்டு சிறியது 1
கொத்தமல்லி சிறிது 
தேன் 1/2 தேக்கரண்டி 
எலுமிச்சை ஜூஸ் 1/4 தேக்கரண்டி 
 


செய்முறை

1.காரட் ,இஞ்சி  மற்றும் கொத்தமல்லி இலை சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக்கி கொள்ளவும்.
2.மிக்ஸியில் இவற்றை போட்டு 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டி கொள்ளவும் 

3.அதன்பின் தேன் ,எலுமிச்சை சாறு கலந்து கொள்ளவும்.

சுவையான காரட் ஜூஸ்  தயார் .

பி .கு 

1.காரட்டை அரைக்கும் பொழுது எலுமிச்சை சாறு ,தேன்  சேர்க்கவே கூடாது 
2.வடிகட்டிய பின் உள்ள விழுதை வீட்டில் வளர்க்கும் செடிகளுக்கு உரமாக போடலாம் 

Thursday, 6 May 2021

CAPSICUM+BABYCORN MASAL

குடை மிளகாய் +பிஞ்சு சோள   மசால்  

தேவையான பொருட்கள்

சிவப்பு குடை மிளகாய் 1

பச்சை குடை மிளகாய் 1

மஞ்சள் குடை மிளகாய் 1

பெரிய வெங்காயம் 1

தக்காளி 1

சோளம் பிஞ்சு 200 கிராம் 

மஞ்சள் பொடி சிறிது அளவு

வரமிளகாய் பொடி  1 +1 தேக்கரண்டி 

கரம் மசாலா பொடி 1 தேக்கரண்டி


கடலை மாவு/அரிசி மாவு  25 கிராம் 

CORNFLOUR /சோளமாவு  25 கிராம்
 
கடலை எண்ணெய் 250 மிலி 


செய்முறை

1.பிஞ்சு சோளம் வெட்டியது +உ ப்பு  + மஞ்சள் பொடி + வரமிளகாய் பொடி  +கடலை மாவு  +அரிசி மாவு  +சோளமாவு   மற்றும்  சூடான எண்ணெய் 1 தேக்கரண்டி  சேர்த்து  லேசாக தண்ணீர் தெளித்து பிசறி வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் கடலை எண்ணெயை சூடு பண்ணவும் .

தயாராக வைத்துள்ளதை எண்ணெயில் உதிராக உதிர்த்து விடவும்.
எண்ணெயில் பொரி த்து எடுக்கவும் .


2. நான்ஸ்டிக் வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணெய்  விட்டு  குடை மிளகாய் ,வெங்காயம் மற்றும் தக்காளியை பெரிய துண்டுகளாக வெட்டி போட்டு வதக்கவும் . அத்துடன் மிளகாய் பொடி 1 தேக்கரண்டி .கரம் மசாலா 1 தேக்கரண்டி ,மஞ்சள் பொடி மற்றும் உப்பு சேர்த்து கிளறவும்.

5 நிமிடங்கள்  வதக்கினால் போதும் .

3. அத்துடன் பொரித்து வைத்துள்ள பிஞ்சு சோளம் சேர்த்து கிளறி இறக்கி மூடி வைக்கவும் .

சுவையான  குடை மிளகாய் +சோள  பிஞ்சு மசால் தயார் 

பி.கு 

சப்பாத்திக்கு அருமையான சத்தான பொருத்தமான ஜோடி .

காரம் மற்றும் உப்பு தேவைக்கேற்றவாறு சேர்த்துக்கொள்ளலாம் 

 



Monday, 3 May 2021

MINT THOGAIYAL

 புதினா தொகையல் 

தேவையான பொருட்கள் 

புதினா 1 கட்டு 
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி 
தேங்காய் 2 தேக்கரண்டி 
பச்சை மிளகாய்  2 
சிவப்பு மிளகாய் 1
இஞ்சி சிறிது 
புளி சிறிது 
உப்பு தேவைக்கேற்ப      

நல்லெண்ணெய்  1 தேக்கரண்டி 


செய்முறை

1.புதினாவை ஆய்ந்து சுத்தமாக 2 முறை அலசி தண்ணீரை வடிய விடவும் 

2.வெறும் வாணலியில் உளுத்தம்பருப்பை பொன்னிறமாக வறுத்து   எடுத்துக்கொள்ளவும்.
3.எண்ணெய் விட்டு  புதினாவை போட்டு வதக்கி  அத்துடன் பச்சை மிளகாய்,தேங்காய் போட்டு வதக்கி எடுத்துக்கொள்ளவும்.
4.சிவப்பு மிளகாய்,இஞ்சி ,புளி மற்றும் உப்பு சேர்த்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து  எடுக்கவும் 

சுவையான புதினா தொகையல் தயார் .

பி .கு 

சாதத்திற்கு நெய்யுடன் போட்டு சாப்பிட அருமையான மற்றும் சத்தான தொகையல் 
இட்லி ,தோசைக்கு தொட்டுக்கொள்ள பொருத்தமானது .


Saturday, 1 May 2021

Tomato kothsu

 தக்காளி   கொத்சு 

(4 நபர்களுக்கு )

தேவையான பொருட்கள் 
தக்காளி  250  கிராம்
பச்சை மிளகாய்  4 (வெட்டியது)
பெரிய  வெங்காயம் 2 -
பொடியாக  வெட்டியது 

சாம்பார் பொடி 1(அ )
மிளகாய் பொடி  தேக்கரண்டி 
மஞ்சள் பொடி சிறிது 

உப்பு தேவைக்கேற்ப 

கடலை மாவு 2 தேக்கரண்டி 
              

தாளிக்க

நல்லெண்ணெய்  2 தேக்கரண்டி 
கடுகு 1/2 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி 
கடலை பருப்பு 1 தேக்கரண்டி 
சிவப்பு மிளகாய் 1
மசாலா சாமான்கள் (சோம்பு ......)
பெருங்காயம் சிறிது
கறிவேப்பிலை
கொத்தமல்லி இலை 

செய்முறை

தக்காளியை  பொடியாக வெட்டிக்கொள்ளவும்.

வாணலியில்  எண்ணெய் விட்டு  கடுகு மறறும் கொடுத்துள்ளவற்றை தாளித்து அத்துடன் பச்சை மிளகாய் ,வெங்காயம், மற்றும் தக்காளி   சேர்த்து வதக்கி பின் மிளகாய் பொடி (அ ) சாம்பார் பொடி ,மஞ்சள் பொடி  மற்றும் உப்பு சேர்த்து  தண்ணீர் 100 மிலி விட்டு வேகவிடவும் .


பின் கடலை மாவு தண்ணீரில் கரைத்து விட்டு கொதிக்க வைத்து இறக்கி விடவும் .

கொத்தமல்லியை பொடியாக நறுக்கி சேர்க்கவும் .

சுவையான தக்காளி   கொத்சு தயார்.



பி .கு 

இட்லி ,தோசை மற்றும் சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள பொருத்தமானது .

கடலை மாவுக்கு பதில் அரிசி மாவு உபயோகிக்கலாம் .