Sunday, 17 October 2021

EGGLESS MUFFIN/மஃபின்


மஃபின் 



தேவையான பொருட்கள் 


தயிர் 1 கப்

சர்க்கரை 3/4 கப் 

பேக்கிங் பவுடர்  1 1/4 டீஸ்பூன் 

பேக்கிங் சோடா 1/2 டீஸ்பூன் 

Baking soda 1/2 Teaspoon

சமையல் எண்ணெய்   1/2 கப் 
வெண்ணிலா எசென்ஸ்  1 டீஸ்பூன் 
மைதா 1 1/2 கப் 
பால் 1 டேபிள் ஸ்பூன் (தேவைப்பட்டால்)

செய்முறை

  • பாத்திரத்தில் தயிர் 1 கப்+சர்க்கரை 3/4 கப் சேர்த்து கம்பி கரண்டியால் (wired whisk) நன்றாக ஒன்று சேர்க்கவும் 

  • பேக்கிங் பவுடர்  1 1/4 டீஸ்பூன் +பேக்கிங் சோடா 1/2 டீஸ்பூன் சேர்த்து  நன்கு கிளறவும் 

  • அப்படியே 5 நிமிடங்கள் விட்டுவிடவும். கலவையில் குமிழ்கள் வந்திருப்பதை காணலாம் 
  • பின் சமையல் எண்ணெய்   1/2 கப் +வெண்ணிலா எசென்ஸ்  1 டீஸ்பூன் சேர்த்து கிளறவும் 
  • பின்பு மைதா 1 1/2 கப் ,சிறிது சிறிதாக சேர்த்து கிளறவும் 
  • தேவைப்பட்டால் பால் 1 டேபிள் ஸ்பூன் சேர்த்து கிளறவும் 
  • இறுதியில் ஸ்பாட்டுலா  கரண்டியை உபயோகித்து நன்கு கிளறவும்.
  •  OTG @180 degree  ல் சூடு பண்ணிக்கொள்ளவும் .
  • பின் கலவையை பேப்பர் கப்பில் ஊற்றி  OTG-ல்  20-25 min வைத்து  எடுக்கவும் 
                         சுவையான மஃபின் தயார் 

பி.கு 

பல்குச்சியில் ஒட்டாமல் இருப்பது சரியான  பதம் ஆகும் 


Ingredients Required


Curd 1 cup

Sugar 3/4 cup

Baking powder 1 1/4 Teaspoon

Baking soda 1/2 Teaspoon

Cooking oil 1/2 cup
Vennila extract/essence 1 Teaspoon
Maida 1 1/2 cup
Milk 1 Tablespoon (if needed)
          

Method

  • Take Curd 1 cup + Sugar 3/4 cup in a bowl and beat well with wired whisk

  • Add Baking powder 1 1/4 Teaspoon and Baking soda 1/2 Teaspoon ,mix it well .
  • Leave it for 5 min. See   the bubbles are formed in the mixture
  • Add Cooking oil 1/2 cup ,Vennila extract/essence 1 Teaspoon and mix well
  • Now add Maida 1 1/2 cup little by little by mixing it regularly
  • If needed add 1 tablespoon milk to keep the mixture consistancy.
  • At last Use spatula to mix it properly
  • Preheat OTG @180 degree .
  • Then keep the mixture in the paper cups containers in OTG for about 20-25 min

Tasty muffin Ready


  Note:

use toothpic to find out readyness as it should not stick with the stick.

Friday, 3 September 2021

RIBBON BAKODA/ரிப்பன் பகோடா


 ரிப்பன் பகோடா 

தேவையான பொருட்கள் 


இட்லி புழுங்கல் அரிசி  5 கப் 

சிவப்பு மிளகாய் 30

பூண்டு 15 பல்

கடலைப்பருப்பு மாவு 2 கப் 
பொட்டு கடலை மாவு 1/2 கப் 

வெண்ணெய் 1 தேக்கரண்டி 

பெருங்காயம் சிறிது 

உப்பு தேவையான அளவு

பொரித்தெடுக்க 

கடலெண்ணெய் 1 லிட்டர் 

                      
செய்முறை

  • அரிசியை நன்றாக களைந்து 4 மணி நேரம் ஊற விடவும்  
  • ஊறிய அரிசியுடன் மிளகாய் மற்றும் பூண்டு சேர்த்து கிரைண்டரில் நைஸாக அரைத்துக்கொள்ளவும் 
  • அரைத்த மாவுடன் கடலை மாவு,பொட்டுக்கடலை மாவு, பெருங்காயம் ,வெண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
  • வாணலியில் கடலை எண்ணையை விட்டு நன்றாக காய்ந்ததும் ரிப்பன் பகோடா அச்சில் பிழிந்து விடவும்.
  • நன்றாக வெந்ததும் எடுத்து ஆற  விடவும்  .
சுவையான மொறு மொறுப்பான ரிப்பன் பகோடா தயார் .

பி.கு :

1. கிரைண்டரில்  அரைக்கும் பொழுது தண்ணீர் தேவையான அளவு தாராளமாக சேர்த்து கொள்ளலாம் .
2. மாவு பிசையும் பொழுது அச்சில் பிழிய வருமளவு பதத்தில் பிசையவும்.

Monday, 23 August 2021

SABUDHANA UPPUMA


ஜவ்வரசி உப்புமா

தேவையான பொருட்கள் 


நைலான் ஜவ்வரிசி 200 கிராம் 

பயத்தம் பருப்பு 50 கிராம் 

தேங்காய் துருவியது 1/2 கப்  

எலுமிச்சை சாறு 1 டீஸ்பூன் 
தாளிக்க 

சீரகம்   1 டீ   ஸ்பூன்

பச்சை மிளகாய் 2 

சிவப்பு மிளகாய் 1

கறிவேப்பிலை ,

கொத்தமல்லி இலை  

உப்பு தேவையான அளவு 


தேங்காய் எண்ணை 1 டேபிள் ஸ்பூன்                         
செய்முறை

    ஊறவைத்த ஜவ்வரிசி 
  •  ஜவ்வரிசியை தண்ணீரில்  3-4 மணி நேரம் ஊறவைத்துக்  கொள்ளவும்.
  • பயத்தம்பருப்பை சிறிது நேரம் ஊற  வைத்து பின் அரை வேக்காடாக வேக வைத்து தண்ணீரை வடித்து விடவும் .
  • நான்ஸ்டிக் வாணலியில் தேங்காய் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம் பெரிய விடவும் 
  • அத்துடன் வரமிளகாய்,  நறுக்கிய   பச்சைமிளகாய் ,   கறிவேப்பிலை சேர்த்து பின் ஊறியஜவ்வரிசி தண்ணீரை நன்றாக வடித்து சேர்த்து கிளறவும் .
  • 3-5 நிமிடங்களில் ஜவ்வரிசி பெரியதாக மற்றும் கண்ணாடி போல பள  பளப்பாக ஆகிவிடும்.
  • பின்பு வேக வைத்த பயத்தம் பருப்பு ,தேங்காய் பூ மற்றும் தேவையான உப்பு சேர்த்து கிளறவும் 
  • அடுப்பிலிருந்து இறக்கிய பின் எலுமிச்சை சாறு சேர்த்து கிளறவும் .
  • கொத்தமல்லி இலை பொடியாக்கி தூவி
         விடவும் .

சுவையான ஜவ்வரிசிஉப்புமா தயார் .

பி.கு :

1. நைலான்/கண்ணாடி ஜவ்வரிசி யில் செய்தால் மட்டுமே உதிர்  உதிராக வரும் .
2.ஜவ்வரிசி ஊற வைத்து கொண்டால் 10 நிமிடங்களில் செய்து விடலாம் .
3.இதற்கு சட்னி  எதுவும் தேவையில்லை .அற்புதமாக இருக்கும்.

Saturday, 24 July 2021

COLOCASIA FRY/சேப்பங்கிழங்கு வறுவல் கறி



 தேவையான பொருட்கள்
(2 நபர்களுக்கு)

சேப்பங்கிழங்கு  1/4 கிலோ  

வரமிளகாய் பொடி (அ ) கரி மசாலா பொடி தேவையான அளவு 
மஞ்சள் பொடி சிறிது 
கடலை மாவு 2 டீஸ்பூன் 
அரிசி மாவு 1 டீஸ்பூன் 
சோளமாவு 1 டீஸ்பூன் 
உப்பு சிறிதளவு
தாளிக்க - நல்ல எண்ணெய் /கடலை எண்ணெய் 1 தேக்கரண்டி 
கடுகு ,உளுத்தம்பருப்பு ,1 சிவப்பு மிளகாய்  ,பெருங்காயம் மற்றும் கறிவேப்பிலை 

செய்முறை

 1.சேப்பங்கிழங்கை  குக்கரில்  வேகவைத்து எடுத்துக்கொள்ளவும் 
2. வேகவைத்து எடுத்து  தோல் உரித்து சிறிய துண்டகளாக்கி கொள்ளவும் 
3. வாணலியை சூடாக்கி   எண்ணையில் தாளிக்க கொடுத்துள்ளவற்றை தாளித்து . 
அத்துடன் உப்பு வரமிளகாய் பொடி(அ )மசாலா பொடி ,மஞ்சள் பொடி மற்றும் மாவு எல்லாவற்றையும் சேர்த்து  நன்றாக பொடி வாசனை போகும் வரை  கிளறவும் . 
பின் அடுப்பை அணைத்து விடவும்  

சுவையான மொறு மொறுப்பான சேப்பங்கிழங்கு வறுவல் கறி தயார் 


பி.கு 

1.வேக வைத்து எடுத்து நன்றாக ஆறியபின் தோல் உரித்தால் சுலபமாகவும் ஒட்டாமலும் வரும்.
2.கடலை மாவு ,அரிசி மாவு,சோள  மாவு இவற்றில் ஏதேனும் 2 மாவு இருந்தாலும் செய்யலாம்  

Tuesday, 20 July 2021

URAD DAL VADA/உளுத்தம்பருப்பு வடை



தேவையான பொருட்கள்
 (15-20 எண்ணிக்கை )

உளுத்தம்பருப்பு  150 கிராம்
பச்சை மிளகாய் 3 
மிளகு 1 டீஸ்பூன் 
சீரகம் 1 டீஸ்பூன் 
பெரிய வெங்காயம் 2
கறிவேப்பிலை சிறிது 
கொத்தமல்லி சிறிது 
உப்பு சிறிதளவு 
அரிசி மாவு 1 மேஜைக்கரண்டி 
பொ ரித்தெடுக்க  தேவையான கடலை எண்ணெய் 

செய்முறை

1.உளுத்தம் பருப்பை 1 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும் .
2.ஊறிய உளுத்தம் பருப்பு +பச்சை மிளகாய் மிக்ஸியில்/கிரைண்டரில்  தண்ணீர் சிறிது சிறிதாக     சேர்த்து நைசாக அரைத்துக்கொள்ளவும் .
3. அரைத்து முடிக்கும் முன் மிளகு சீரகம் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவும் 
4.வெங்காயம் பொடியாக வெட்டிக்கொள்ளவும் 
5.கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லியை பொடியாக வெட்டிக்கொள்ளவும் 
6..அரைத்து  மாவுடன் வெங்காயம் ,கறிவேப்பிலை ,கொத்தமல்லி மற்றும்  அரிசி மாவு ,உப்பு தேவையான அளவு சேர்த்து பிசைந்து கொள்ளவும் .
7. வாணலியில் கடலை  எண்ணெயை சூடு பண்ணவும் .
8.மாவை சிறு உருண்டைகளாக்கி தட்டி  பின் நடுவில் ஓட்டை போட்டு  
  எண்ணெயில் பொறித்து எடுக்கவும் .

சூடான சுவையான உளுத்தம்பருப்பு  வடை தயார் 

பி.கு 
1.வெங்காயம்   சேர்க்காமலும்  வடை செய்யலாம் 
2.சாம்பார் வடைக்கு வெங்காயம் சேர்க்காத வடையை சாம்பாரில் ஊற  வைத்து சாப்பிடலாம் 
3. மிக்ஸியில் அரைப்பதற்கு குளிர்ந்த நீரை பயன் படுத்திக்கொள்ளலாம் .மாவு சூடு ஏறி வடை சிவந்து போவதை தவிர்க்கலாம் 

Wednesday, 7 July 2021

Aval Upma/அவல் உப்புமா



தேவையான பொருட்கள்

சிவப்பு அவல்/வெள்ளை அவல்  (கெட்டி)200 கிராம் 
பெரிய வெங்காயம் 1
பச்சை மிளகாய் 2
தக்காளி 1
கேரட் 1
இஞ்சி சிறிது 
மஞ்சள் பொடி  சிறிது 
தாளிக்க 
நல்லெண்ணெய் /கடலெண்ணெய் 2 டீஸ்பூன் 
கடுகு 1 டீஸ்பூன் 
உளுந்தம்பருப்பு 2 டீஸ்பூன் 
சீரகம் 1 டீஸ்பூன் 
சிவப்பு மிளகாய் 1
நிலக்கடலை வறுத்தது 2 டீஸ்பூன் 
கறிவேப்பிலை
கொத்தமல்லி  இலை       

செய்முறை

1.அவல் -ஐ சுத்தம் செய்து ,தண்ணீரில் களைந்து எடுத்து சிறிது நீரில் 15 நிமிடம்  நேரம் ஊற விடவும்.
2.பெரிய வெங்காயம் ,பச்சைமிளகாய் ,தக்காளி, இஞ்சியை பொடியாக வெட்டிக்கொள்ளவும் 
3.வாணலியில் எண்ணெய் விட்டு மேலே கொடுத்துள்ளவற்றை போட்டு தாளித்து பின் பொடியாக வெட்டிய பெரிய வெங்காயம் ,பச்சைமிளகாய் ,தக்காளி இஞ்சியை சேர்த்து நன்றாக வதக்கவும்.
4.சிறிது உப்பு  துருவிய காரட் சேர்த்து வதக்கிய பின் ஊறிய அவல்  சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும் .
5.கொத்தமல்லி இலையை பொடியாக வெட்டி மேலே தூவி விடவும்.

சுவையான சத்தான   அவல்   உப்புமா  தயார் .

பி.கு 

1.சிவப்பு அவல் அல்லது  வெள்ளை அவல் -இல் செய்யலாம் .
2.தேவைப்பட்டால் தேங்காய் சட்டினி சேர்த்து சாப்பிடலாம் 
3.காலை/இரவு  உணவாகவோ மாலை சிற்றுண்டியாகவோ செய்யலாம் 

Saturday, 3 July 2021

Sesame Thogaiyal/எள்ளு தொகையல்


எள்ளு தொகையல்  

தேவையான பொருட்கள் 

கருப்பு எள்ளு 50  கிராம் 
சிவப்பு மிளகாய் 3
புளி சிறிது 
உப்பு தேவைக்கேற்ப 
           
செய்முறை
  • வெறும் வாணலியில் எள்ளு  மற்றும் மிளகாய் வறுத்து  எடுத்துக் கொள்ளவும் .
  • எள்ளு சிறிது பொரிய விடவும் .
  • இவை எல்லாவற்றையும் புளி மற்றும்  உப்பு சேர்த்து மிக்ஸியில் சிறிது தண்ணீர் விட்டு அரைத்து எடுக்கவும்.
  • சுவையான சத்தான எள்ளு  தொகையல் தயார்.

பி.கு 
  1. சாதத்துடன் சேர்த்து சாப்பிட அருமையான பொருத்தம்.
  2. எண்ணெய்  இல்லாத மற்றும் சத்தான தொகையல்.
  3. மிளகாய் தேவையான அளவு சேர்த்து கொள்ளலாம் .
  4. இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது .

Ingrdients

Black Sesame 50 gms
3 Red dried chili
Pinch of Tamarind
Salt

Instructions
  • In a dry pan, fry the sesame seeds  and chilies.
  • Let sesame seeds splits a little.
  • In a mixer. add the sesame seeds , chilies, tamarind with salt and grid them. Add water to get a paste consistency.
  • Yummy Sesame thogaiyal is ready to be served.
Notes
  1. Add them to your white rice with a little ghee/gingely oil and enjoy instant lunch.
  2. Red chillies can be added as per requirement.
  3. Its oil-free, healthy.
  4. Good for reducing sugar problem.

Wednesday, 23 June 2021

Kalakala - கலகலா

தேவையான பொருட்கள் 

கோதுமை மாவு 2 கப் 
சர்க்கரை  1 கப் 
ஏலக்காய்  2
நெய் 2 டீஸ்பூன் 


பொரித்தெடுக்க  தேவையான கடலை எண்ணெய் 




செய்முறை

1. சர்க்கரையை மிக்ஸி ஜாரில் நைசாக 
அரைத்துக் கொள்ளவும்.
2. ஏலக்காயை பொடித்துக் கொள்ளவும்.
3. கோதுமை மாவு +சர்க்கரை +ஏலம் + நெய் சேர்த்து நன்றாக 
கலந்து கொள்ளவும்.
4.பின் சிறிது தண்ணீர் சேர்த்து சப்பாத்தி பதத்தில் 
பிசைந்து கொள்ளவும்.







5.சிறு உருண்டையாக எடுத்து சப்பாத்தி கட்டையில் சப்பாத்தி
 போல சிறிது கனமாக தேய்த்து கொள்ளவும் 
6.ஓரங்களை வெட்டி எடுத்தபின் தேவையானபடி சதுரமாகவோ/டயமண்டு  ஆகவோ வெட்டிக்கொள்ளவும் 








7.பின் வாணலியில் எண்ணெய் வைத்து
 நன்றாக சூடேறியதும்
வெட்டிய துண்டுகளை
போட்டு வேகவைத்து எடுக்கவும்.




சுவையான கலகலா  தயார் 

பி.கு 

1.தண்ணீர் சேர்த்து பிசையும் பொழுது சிறிது சிறிதாக கவனமாக சேர்க்க வேண்டும்.
சர்க்கரை சேர்த்து இருப்பதால் அதிகம் தேவைப்படாது 
2.சப்பாத்தி சிறிது கனமாக இருக்க வேண்டியது அவசியம்.
3.எண்ணைக்குள் போட்டு சிறிது நேரம் வெந்த பிறகுதான்  கிளறி விட வேண்டும். 
4. எண்ணையில் நன்றாக வெந்து எடுக்க வேண்டும்.
5. எடுத்து சிறிது ஆறியபின் மொற மொறப்பாகி(crispy)  விடும் .
5. தேவைக்கேற்ப இனிப்பு சேர்த்துக்கொள்ளலாம் 

Thursday, 17 June 2021

Ragi Semiya(Sweet&Karam) - கேழ்வரகு சேமியா(இனிப்பு &காரம்)

 

 தேவையான பொருட்கள் 

இனிப்பு 

அணில் கேழ்வரகு சேமியா 100 கிராம்

நாட்டு சர்க்கரை  4 டீஸ்பூன் 

தேங்காய்  துருவியது  2 டீஸ்பூன் 

ஏலக்காய் 2 பொடித்தது 

நெய் 2 டீஸ்பூன் 

காரம்  

அணில் கேழ்வரகு சேமியா 100 கிராம் 

பெரிய  வெங்காயம் 1

பச்சை மிளகாய் 2

காரட் 1 (துருவியது )

கறிவேப்பிலை 

எண்ணெய் 2 டீஸ்பூன் 

கடுகு 1 டீஸ்பூன் 

சிவப்பு மிளகாய் 1

உளுந்தம்பருப்பு 2 டீஸ்பூன் 

உப்பு தேவையான அளவு 

செய்முறை

1. அணில் சேமியா  எல்லாவற்றையும் (100+100= 200 கிராம் ) துளியளவு உப்பு சேர்த்து ,
     2 லிட்டர்  தண்ணீரில் 5 நிமிடங்கள் ஊற  விடவும்  .

2. தண்ணீரை வடித்து பின் இட்லி பாத்திரத்தில் 10 நிமிடங்கள் வேக வைத்து எடுத்துக்கொள்ளவும் 


இனிப்பு சேமியா 
இனிப்பு சேமியா 




 பாதி அளவு மாவில் (100 கிராம்)  தேங்காய் ,
 நாட்டு சர்க்கரை,நெய் மற்றும்  ஏலக்காய் 
பொடி  சேர்த்து நன்றாக கிளறி மூடி வைக்கவும் .   

சுவையான இனிப்பு சேமியா  தயார் 





கார சேமியா  
காரசேமியா 

வாணலியில் எண்ணெய் விட்டு  கடுகு ,உளுத்தம்பருப்பு ,கறிவேப்பிலை ,சிவப்பு மிளகாய் போட்டு தாளித்து அத்துடன் பொடியாக வெட்டிய பெரிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய்  சேர்த்து கிளறவும். நன்கு வெங்காயம் வதங்கியதும் சிறிது உப்பு மற்றும் காரட்  சேர்த்து கிளறி பின் வெந்த கேழ்வரகு சேமியாவை  சேர்த்து கிளறி இறக்கி  மூடி வைக்கவும் .

சுவையான கார சேமியா  தயார் 


பி.கு 

1. சேமியாவை 5 நிமிடத்திற்கு மேல் தண்ணீரில் ஊற  விட கூடாது.
அதிகம் ஊறினால் கூழ் போல ஆகிவிடும் . 
2.அதிக எண்ணெய் இல்லாத சத்து  மிக்க ஒரு உணவு .
3.உடனடியாக செய்யக்கூடியது 
4.அனைவருக்கும் ஏற்ற காலை உணவு 
5. மாலை சிற்றுண்டி மற்றும் இரவு உணவுக்கும் ஏற்றது .
6.கொத்தமல்லி இலை இருந்தால் பொடியாக வெட்டி கார சேமியாவில் கடைசியில் தூவி விடலாம்  

Monday, 14 June 2021

WheatFlour Puttu/கோதுமைமாவு புட்டு

 இனிப்பு & காரம் 

தேவையான பொருட்கள் 

இனிப்பு புட்டு 

வறுத்த கோதுமை மாவு 200 கிராம்

நாட்டு சர்க்கரை  6 டீஸ்பூன் 

தேங்காய்  துருவியது   4 டீஸ்பூன் 

ஏலக்காய் 2 பொடித்தது 

நெய் 2 டீஸ்பூன் 

கார புட்டு 

வறுத்த கோதுமை மாவு 200 கிராம் 

பெரிய  வெங்காயம் 1

பச்சை மிளகாய் 2

கறிவேப்பிலை 

எண்ணெய் 2 டீஸ்பூன் 

கடுகு 1 டீஸ்பூன் 

சிவப்பு மிளகாய் 1

உளுந்தம்பருப்பு 2 டீஸ்பூன் 

உப்பு தேவையான அளவு 


செய்முறை

1. வறுத்த கோதுமை மாவு எல்லாவற்றையும் (200+200= 400 கிராம் ) துளியளவு உப்பு சேர்த்து ,
சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து புட்டு மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும் .
2. பின் இட்லி பாத்திரத்தில் 5 நிமிடங்கள் வேக வைத்து எடுத்துக்கொள்ளவும் 

இனிப்பு புட்டு 


 பாதி அளவு மாவில் (200 கிராம்) தேங்காய் ,
 நாட்டு சர்க்கரை,நெய் மற்றும்  ஏலக்காய் 
பொடி  சேர்த்து நன்றாக கிளறி மூடி வைக்கவும் .   
சுவையான இனிப்பு புட்டு தயார் 






கார புட்டு 

வாணலியில் எண்ணெய் விட்டு  கடுகு ,உளுத்தம்பருப்பு ,கறிவேப்பிலை ,சிவப்பு மிளகாய் போட்டு தாளித்து அத்துடன் பொடியாக வெட்டிய பெரிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து கிளறவும். நன்கு வெங்காயம் வதங்கியதும் சிறிது உப்பு சேர்த்து கிளறி பின் வெந்த கோதுமை மாவையும் சேர்த்து கிளறி இறக்கி  மூடி வைக்கவும் .

சுவையான கார புட்டு தயார் 





பி.கு 

1. கோதுமையை வறுத்து மாவு தயாரித்தால் மிக சுவையாக இருக்கும்.
கோதுமை மாவு கைவசம் இருந்தால் அதை வறுத்தும்  செய்யலாம் 
2.எண்ணெய் இல்லாத சத்து  மிக்க ஒரு உணவு .
3.உடனடியாக செய்யக்கூடியது 
4.அனைவருக்கும் ஏற்ற காலை உணவு 
5. மாலை சிற்றுண்டி மற்றும் இரவு உணவுக்கும் ஏற்றது  



Thursday, 10 June 2021

RICE KANCHI/அரிசி கஞ்சி



தேவையான பொருட்கள் 

புழுங்கல் அரிசி 200 கிராம் 
பச்சை பயறு  50 கிராம் 
இஞ்சி சிறிதளவு 
தேங்காய் துருவியது 2 மேஜைக்கரண்டி 
சீரகம் 2 டீஸ்பூன் 
உப்பு தேவையான அளவு  


செய்முறை

1. அரிசி+பச்சைப்பயறு  நன்றாக களைந்து 1/2 மணி நேரம் ஊற விடவும்    
2. பின் 750 மிலி தண்ணீர் +பொடியாக வெட்டிய இஞ்சி சேர்த்து குக்கரில்  நன்றாக வேகவைத்து எடுத்துக்கொள்ளவும் 
3. அத்துடன் தேங்காய் ,சீரகம் , தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும் .

சுவையான அரிசி கஞ்சி  தயார் 

பி.கு 

பீட்ரூட் தொகையல் 
1.சிவப்பு அரிசி /கேரளா அரிசி பயன் படுத்தி கஞ்சி செய்யலாம் 
2.எண்ணெய் இல்லாத சத்து  மிக்க ஒரு உணவு .
3.பத்திய  சாப்பாட்டிற்கு ஏற்றது .
4.அனைவருக்கும் ஏற்ற காலை உணவு 
5..பீட்ரூட் தொகையலுடன் சாப்பிட அருமையாக இருக்கும் 


Monday, 7 June 2021

POTATO MASAL/உருளைக்கிழங்கு மசாலா


தேவையான பொருட்கள் 

உருளை கிழங்கு   1/4 கிலோ 
பெரிய வெங்காயம்  2
தக்காளி 1
பச்சை மிளகாய்         2
உப்பு தேவையான அளவு  
மஞ்சள் பொடி சிறிது
பொட்டுக்கடலை 2 டீஸ்பூன்  
சிவப்பு மிளகாய்  2

தாளிக்க 
கடலை எண்ணெய் /நல்லெண்ணெய் 2 தேக்கரண்டி 
 கடுகு                       1 டீஸ்பூன் 
உளுத்தம்பருப்பு  1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு     1 டீஸ்பூன் 
சிவப்பு மிளகாய்   2
மசாலா சாமான் 
சோம்பு ,பட்டை ,பிரிஞ்சி இலை  சிறிது 
ஏலம் 1, லவங்கம் 1
கறிவேப்பிலை 
கொத்தமல்லி 

செய்முறை

1. உருளை கிழங்கை  குக்கரில்  வேகவைத்து எடுத்துக்கொள்ளவும் 
2. உருளைக்கிழங்கு தோல் உரித்து சிறிய துண்டகளாக்கி கொள்ளவும் 
3. சிறிது  எண்ணையில் தாளிக்க கொடுத்துள்ளவற்றை தாளித்து    
அத்துடன் பொடியாக வெட்டிய  வெங்காயம் தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும் 
4, நன்றாக வதங்கிய பின்  உப்பு  மற்றும் மஞ்சள் பொடி 
 சேர்த்து நன்றாக பொடி வாசனை போகும் வரை  கிளறவும் . 
5 உருளைக்கிழங்கு சேர்த்து கிளறி பின் 250 மிலி தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும் 
6,பொட்டுக்கடலையை+ வரமிளகாய் 2 மிக்ஸியில் நைசாக பொடியாக்கி மேலே தூவி கிளறவும் 
7. ஒன்று சேர்த்து  கிளறியபின்  அடுப்பை அணைத்து விடவும்  
8 ஒரு கிண்ணத்தில் எடுத்து .பொடியாக்கிய கொத்தமல்லி இலையை மேலேதூவி விட்டு அலங்கரிக்கவும் 

 ஹோட்டல் பக்குவத்தில் சுவையான உருளைக்கிழங்கு மசால் தயார்  


பி.கு 

1.பூரியுடன் சேர்த்து சாப்பிட அருமையானது, சுவையானது மற்றும்  பொருத்தமானது
2.காரம் தேவைப்பட்டால் பச்சை/வர மிளகாய் சேர்த்துக்கொள்ளலாம் 



Wednesday, 2 June 2021

Neem leaf kasayam/ வேப்பிலை கஷாயம்




தேவையான பொருட்கள்
(3 நபர்களுக்கு )

வேப்பிலை 20
பூண்டு          12


செய்முறை

1.வேப்பிலையை சுத்தம் செய்து பூண்டு 10 பல் சேர்த்து 500 மிலி நீரில் நன்றாக கொதிக்க விடவும் .

2.நீர் 300 மிலி ஆக வற்றிய பின் வடிகட்டி எடுத்துக்கொள்ளவும் 


வேப்பிலை கஷாயம்  தயார் .


பின் குறிப்பு

1. சளி மற்றும் இருமலுக்கு சிறந்த கஷாயம் 
 2.வயிற்று பூச்சியை போக்க வல்லது 
3.நல்ல செரிமானம் மற்றும் பசி எடுக்க  சிறந்த மருந்து.
4. மேலே குறிப்பிட்ட அளவு 3 நபர்களுக்கு  போதுமானது 
5. பூண்டு உரிக்காமல் அப்படியே வேக விடலாம் 
6. கஷாயம் குடித்த பிறகு பூண்டை உரித்து சாப்பிடலாம்